மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயர்நீதிமன்றம்: மதுக்கடைகளை ஊருக்குள் திறக்க வேண்டாம்



May 12, 2017

தேசியமற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் உள்ள 3500 மதுக்கடைகள் மூடப்பட்டது.

Siragu-madras-high-court

மதுக்கடைகள் மூலமாக அதிகமாக வருமானம் ஈட்டிய தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை கிராமத்தில் திறப்பதற்கு ஏற்பாடு செய்தது. ஆனால் கிராமத்தில் மதுக்கடைகளை திறப்பதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனையடுத்து கரூர், சேலம், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதன் பிறகும் மதுக்கடைகளை  திறப்பதற்கான வேலைகள் நடந்து வருவதால் உயர்நீதிமன்றம் தலையிட வேண்டும்என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணையில் கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றிய இடங்களில் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்றும், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடும் பொதுமக்களை காவல் துறையினர் தாக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு கேடு உண்டாகும், தமிழக அரசு வியாபார நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்று கூறினார் உயர்நீதிமன்ற நீதிபதி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயர்நீதிமன்றம்: மதுக்கடைகளை ஊருக்குள் திறக்க வேண்டாம்”

அதிகம் படித்தது