மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயிர் காக்கும் மருத்துவரின் உயரிய சேவை

சிறகு நிருபர்

Aug 29, 2020

siragu thiruvengadam1

சென்னை வியாசர்பாடியில் 1973 லிருந்து ஏழை, எளிய மக்களுக்கு கடந்த நாற்பது வருடங்களாக மருத்துவத்தை சேவையாக செய்து வந்தவர் மருத்துவர் திருவேங்கடம். ஆரம்பகாலத்தில் ரூபாய் 2ல் மருத்துவத்தை சேவையாக துவங்கிய மருத்துவர் திருவேங்கடம், அண்மையில் ரூபாய் 5 க்கு மருத்துவம் பார்த்து வந்தார்.

ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் 1973 ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து முடித்த திருவேங்கடம், சில காலம் சென்னை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றினார்.  அதன் பின் பெட்ரோலிய துறை சார்ந்த பல்வேறு தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவை அளித்து வந்தார். இச்சேவையை பாராட்டி ‘சிறந்த மனிதர்’ என்ற விருதை வி.ஐ.டி. கல்வி நிறுவனம் 2017ம் ஆண்டு வழங்கி கௌரவித்தது.

கொரோனா ஊரடங்கு காலத்திலும் கூட அலைபேசி மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை அளித்து வந்தார்.

சேவை செய்வதே மருத்துவப் படிப்பிற்கான உண்மையான பொருள் என்று நம்பிய இவர் அதனை வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார்.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்தை சேவையாக செய்து வந்த 70 வயதான மக்கள் டாக்டர் திருவேங்கடம் சென்ற ஆகஸ்டு 13ல் உடல் உடல்நலக்குறைவு காரணமாகரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆகஸ்டு 15 ல் காலமானார். இவருடைய மருத்துவ சேவை மிகவும் போற்றத்தக்கது.

இவரது மறைவிற்கு பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரமாகிவிட்ட இம்மருத்துவ துறையில் தாம் இறக்கும் வரையில் மருத்துவ சேவை செய்து வந்த மருத்துவர் திருவேங்கடம் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயிர் காக்கும் மருத்துவரின் உயரிய சேவை”

அதிகம் படித்தது