மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகின் துயரம் !(கவிதை)

ராஜ் குணநாயகம்

Oct 22, 2016

Siragu-eelam

தூர தேசத்தவன் எதிரே

அசரீரி ஒன்று தோன்றி

“என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேள்

விடையளிக்கிறேன்” என்றது

 

இவ்வுலகின் செல்லாக்காசு

எதுவோ?

அவனும் கேட்டான்

 

“ஈழத்தமிழனின் உயிரும்

அவன் உரிமைகளும்”

பதில் சொல்லியே

அசரீரியும் மறைந்தது
யார் இந்த ஈழத்தமிழர்கள்……..

என்ற கேள்விகளோடு

ஐ.நா நோக்கி புறப்பட்டான்

அவன்

 

சோமாலியர்கள்

சூடானியர்கள்

பாலஸ்தீனர்கள்

காஸ்மீரிகள்

திபெத்தியர்கள்

எனும் பட்டியலிலே

ஈழத்தமிழர்கள்
“இவர்களே உலகில் உரிமையற்றவர்கள்”

என ஐ.நா முன்றலிலே

இரத்த சிவப்பு எழுத்துக்களால்

பொறிக்கப்பட்டிருக்க கண்டான்
இதயம் உடைந்து

கண்கள் கலங்கி நின்றான்

எதுவுமே செய்யமுடியாமல்

ஈழத்தமிழர்கள் போலவே………!
பரிதாபம்

ஈழதேசத்த்திலோ

“சிங்கயாக்கள்

2 கொட்டியாக்களை

கொன்றுவிட்டதாக”

பல சேனாக்கள் மீண்டும் ஆர்ப்பரிக்கதொடங்கிவிட்டார்கள்…..!
உலகின் துயரம்

உலகின் செல்லாக்காசு

ஈழத்தமிழர்கள் என்று

இனி வரலாறுகள் எழுதப்படட்டும்………………………….!
-ஈழன்-

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகின் துயரம் !(கவிதை)”

அதிகம் படித்தது