மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



Dec 1, 2016

திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த 25ம் தேதியிலிருந்தே உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அவர் கடந்த ஒரு மாத காலமாக எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. யாரையும் சந்திக்காமல் வீட்டிலே ஓய்வு எடுத்து வந்தார்.

siragu-karunanidhi

இந்நிலையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மு.கருணாநிதி இன்று சென்னை ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து காவிரி மருத்துவமனை நிர்வாகம், மு.கருணாநிதிக்கு ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாடுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும் அவர் சில நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மு.கருணாநிதியுடன் ராஜாத்தி அம்மாள், ஸ்டாலின், பொன்முடி, தயாநிதி மாறன் போன்றோர் உடனிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்”

அதிகம் படித்தது