மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் 10ம் நாளான இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது



Nov 29, 2016

நவம்பர் 8ம் தேதி500, 1000 ரூபாய்நோட்டுகளை திரும்பப் பெற்றதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்குஎதிர்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 16ம் தேதி குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது.

siragu-rajya-sabha

இக்கூட்டம் ஆரம்பித்த நாள்முதல் ரூபாய்நோட்டு விவகாரம் காரணமாக எதிர்கட்சிகள் அமளியால் ஒத்திவைக்கப்பட்டுவருகிறது. 10ம் நாளானஇன்று 11 மணியளவில் ராஜ்யசபா துவங்கியது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து சபாநாயகர் அருகில் வந்து கோஷமிட்டனர் எதிர்கட்சி எம்.பி.க்கள். இரண்டு முறை ஒத்திவைத்தப் பிறகும் கூச்சல், குழப்பம் அதிகமானதால் சபாநாயகர் நாளை வரை ராஜ்ய சபாவை ஒத்தி வைத்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் 10ம் நாளான இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது”

அதிகம் படித்தது