மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எது பயங்கரவாதம்?(கவிதை)

ராஜ் குணநாயகம்

May 7, 2016

bayangaravaadham1அன்று தமிழர் என்றால்

ஸ்ரீலங்காவில் பயங்கரவாதி

இன்று தாடி வளர்த்த இஸ்லாமியர் எல்லாம்

உலகில் பயங்கரவாதி!

 

அடக்கி ஒடுக்கப்படும் இனம்

துணிந்து எதிர்த்து

தம் சுதந்திரத்துக்காக போராடினால்

அது பயங்கரவாதமோ?
தம் தேசத்து மக்களையே

பயங்கரவாதத்தின் பெயரால்

கொன்றழிக்கும் அரசுகள்

புரிந்திடும் கோரத்தாண்டவங்கள்

பயங்கரவாதம் இல்லையோ?
மக்கள் சுதந்திரங்கள் ஒடுக்கப்பட்டு

மனித உரிமைக்குரல்கள் நசுக்கப்பட்டு

ஊடகங்களுக்கு சிறையிட்டு

மக்கள் பணத்தை சுரண்டி

விழுங்கி ஏப்பமிட்டு

சுவிஸ் வங்கியிலும்

பனாமா வங்கியிலும்

கறுப்புப்பணத்தை பதுக்கிவைத்து

சுகபோகங்கள் அனுபவித்திடும்

சர்வாதிகாரங்கள்

பயங்கரவாதம் இல்லையோ?
வறுமைப்பட்ட தேசங்களில்

தூண்டிவிடப்படும்

உள்நாட்டு கலவரங்கள்,வன்முறைகள்,போர்கள்–

வளங்கள் சுரண்டும்

சந்தை தேடும்

சர்வதேச ஆயுத வியாபாரிகள்

முதலாளித்துவ தேசங்களின்

சூட்சுமங்கள்,குள்ளநரித்தனங்கள்

பயங்கரவாதம் இல்லையோ?
பயங்கரவாதம்!

நவீன சந்தைப்படுத்தல் குறியீட்டு நாமம்

மேலைத்தேயங்களின்

பொருளாதார

அரசியல்

இராணுவ நலன்சார்

தந்திரோபாய சதுரங்க ஆட்டம்!

 

இதன் வரைவிலக்கணம்

அடிக்கடி மாற்றிக்கொள்ளப்படும்

தேவைகளும் நலன்களும் மாறிக்கொள்ளும்போது………..
இதுவும் இன்றைய உலக மாற்றங்களின் நியதியோ…………..?
-ஈழன்-


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எது பயங்கரவாதம்?(கவிதை)”

அதிகம் படித்தது