மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எஸ்.பி.ஐ: வங்கிக் கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு ஐந்தாயிரம் இருக்க வேண்டும்



Mar 4, 2017

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு ஐந்தாயிரம் இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Siragu sbi

பெருநகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ஐந்தாயிரமும், நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையாக மூன்றாயிரமும், புறநகர் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையாக இரண்டாயிரமும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ஓராயிரமும் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தனியார் வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியிருக்கையில், ஏ.டி.எம்-களில் பத்து முறை வரை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம் என்று அறிவித்திருக்கிறது எஸ்.பி.ஐ. இவை அனைத்தும் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்று கூறியுள்ளது எஸ்.பி.ஐ வங்கி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எஸ்.பி.ஐ: வங்கிக் கணக்கில் இனி குறைந்தபட்ச இருப்பு ஐந்தாயிரம் இருக்க வேண்டும்”

அதிகம் படித்தது