மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏப்ரல் 12-ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல்



Mar 10, 2017

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் பலரும் இத்தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Siragu election

எம்ஜிஆர் அம்மா தீபா- பேரவையின் பொதுச்செயலர் தீபா போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க மூன்று பிரிவுகளாக சிதறியுள்ளதால் பா.ஜ.க.-வுக்கு இத்தேர்தல் சாதகமாக இருக்கும் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற்று ஏப்ரல் 15ந்தேதி எண்ணப்படுகின்றது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏப்ரல் 12-ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல்”

அதிகம் படித்தது