மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏப்ரல் 7ம் தேதி முதல் நெடுவாசல் போராட்டம்



Apr 3, 2017

தமிழர்களின் பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. இப்போராட்டம் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அமைந்தது. அதில் வெற்றியும் கண்டது.

Siragu-neduvasal2

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்தது மத்திய அரசு. இதனை எதிர்த்து நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை போன்ற இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மக்களின் அனுமதி இன்றி இத்திட்டம் செயல்படாது என்று மத்திய மாநில அரசு கூறியதன் பெயரில் அப்போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உட்பட நாடுமுழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை அடுத்து தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டம் ஏப்ரல் 7ந்தேதி முதல் போராட்டக்காரர்கள் அணிதிரள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏப்ரல் 7ம் தேதி முதல் நெடுவாசல் போராட்டம்”

அதிகம் படித்தது