மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏழையின் கலைந்த கனவு! (கவிதை)

ராஜ் குணநாயகம்

Sep 23, 2017

Siragu-en-kanmoodinaai1

சகோதரி அனிதா!

நீயாய் நீ சாகவில்லை

நீ சாகடிக்கப்பட்டாய்

“நீற்” உன்னை சாகடித்தது!

உன் கனவுகளோ சாகவில்லை

உன் கனவுகளை

உன்னைப்போல் ஆயிரமாயிரம்

அனித்தாக்களுக்குள் விதைத்துவிட்டல்லவா

போயிருக்கிறாய்

எரிமலையாய் எழுந்து நிற்கும்

மாணவர்கள் கூட்டமே சாட்சி!

பாரதம் இன்று

தாழ்ந்தோரென்றும்

உயர்ந்தோரென்றும்

மனிதரைதரம் பிரித்தே

உலகில் தாழ்த்தப்பட்ட தேசமாச்சோ!

பாரதம் இன்று

ஏழைகளின் கண்ணீரையும்

தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்படுவோரின்

இதயத்தின் வலிகளையும்

பாராத தேசமாச்சோ!

அனிதாவின் கல்லறையில் எழுதுங்கள்

“ஏழைகளின் கண்ணீரும்

கனவுகளும்

இத்தேசத்தில் மதிப்பற்றவை” என்று

இது அனிதாவின் கலைந்துபோன

கனவு அல்ல

ஏழைகளின் கலைந்துபோகும் கனவுகள்….!

-ஈழன்-


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏழையின் கலைந்த கனவு! (கவிதை)”

அதிகம் படித்தது