மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏ.டி.எம்-களில் 5 தடவைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும்



Jan 6, 2017

500, 1000 ரூபாய் நோட்டுக்களை கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று அறிவித்தது மத்திய அரசு. இதையடுத்து ஏ.டி.எம் மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

siragu-atm

ஏ.டி.எம்-களில் பணம் எடுப்பதில் இருந்த தளர்வுகள் கடந்த டிசம்பர் மாதத்தோடு முடிவடைந்தது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை அதாவது ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம்-களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்-களில் ஐந்து முறையும், மற்ற வங்கி ஏ.டி.எம்-களில் மூன்று முறை மட்டுமே கட்டணமில்லாமல் எடுக்கமுடியும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கும்பொழுதும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏ.டி.எம்-களில் 5 தடவைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும்”

அதிகம் படித்தது