மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஐந்து லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ்



Feb 22, 2017

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்றது மத்திய அரசு. அதன் பிறகு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன.

A man deposits his money in a bank in Amritsar

ரூபாய் நோட்டு வாபஸ்-க்குப் பிறகு ரூ.5 லட்சத்திற்கும் மேல் 18 லட்சம் பேர் டெபாசிட் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளை வருமான வரித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் ரூபாய் நோட்டு வாபஸ்-க்குப் பிறகு ரொக்கமாக கடன் பாக்கியை செலுத்தியவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய நேரடி வரிவிதிப்பு கழகம்(சிபிடிடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 31க்குப் பிறகு புதிய வரி விதிப்பு கொள்கை அமலுக்கு வருவதால், சந்தேகப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஐந்து லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ்”

அதிகம் படித்தது