மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஒரு வாசகனின் கேள்வி! (கவிதை)

இல. பிரகாசம்

Aug 19, 2017

Siragu kavikkuyil

 

ஒரு வாசகன் என்னிடம் அந்தக் கேள்வியை கேட்டான்
நான் சொன்னேன். அது
“அறிவியலின் வரையறைக்கு உட்படாதது
அறிவியலின் கருத்துக்களை கேலிக்குள்ளாக்குவது” என்றேன்

“அறிவியலுக்கும் அதற்குமான தொடர்பென்ன?”
எழுத்தாளனின் சட்டையை பிடித்துக் கேள்வி கேட்கும்
சுதந்திர விமர்சகனின் சுதந்திரமான
ஆராய்ச்சியின் தொணி குரலில் வழுத்தது!

அறிவியல் சந்தேகங்களை எழுப்பவது
அறிவியலுக்கு உட்படாத கேலிக் கற்பனையை வடிப்பதில்
அலாதியான சுகம் காண்பது! இது!

அறிவியல் சந்தேகங்களை ஊக்குவிப்பது
அறிவியலின் போக்குகளை தன்னளவில் உதாசீனப்படுத்துவது இது
அறிவியல் சந்தேகங்களை தீர்ப்பது
அறிவியலின் சந்தேகங்களை தன்னுலகில் தன்சித்திர வடிவத்தில்
நேர் எதிர்மறை அழகியலுடன் விரித்து வைத்திருப்பது!
அதனை தனக்கான வடிவத்தில் இச்சை கொள்வது!

மீண்டும் அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டான்
கவிதை என்பது யாது?


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒரு வாசகனின் கேள்வி! (கவிதை)”

அதிகம் படித்தது