மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஓ.பி.எஸ். அணி: அதிமுக-வின் இரு அணிகளும் இணைப்பு விவகாரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தை



Apr 20, 2017

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக அணி இரண்டாகப் பிரிந்தது. அதிமுக கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் பிரிந்து சென்று ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை தேவை என்ற கோரிக்கையை முன் வைத்து தர்ம யுத்தத்தைத் துவக்கினார்.

Siragu o.p.s

தற்போது அதிமுக-விலிருந்து தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை நீக்குவதாகவும், ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஜெ., மரணத்திற்கு நீதி விசாரணை அமைக்க வேண்டும், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இவைகளை நிறைவேற்றினால்தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஓ.பி.எஸ். அணி: அதிமுக-வின் இரு அணிகளும் இணைப்பு விவகாரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றினால் பேச்சுவார்த்தை”

அதிகம் படித்தது