மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கடல் பயணம்

சுப. இராமநாதன்

Nov 23, 2019

siragu kadal payanam1
மக்கள் பழங்காலம் முதலே பயணம் மேற்கொண்டுள்ளனர். நாடோடிகளாக, கால்நடை வளர்ப்பவர்களாக பழங்கால மக்கள் பயணப்பட்ட பயணங்கள் அதிகமாகும். நாகரீகம் வளர வளர நிலப்பயணம் தாண்டி நீரைக் கடக்கும் கடல் பயணத்திற்கும் செல்லும் நிலை ஏற்பட்டது. ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும் நடைமுறை வாய்த்தது.

கடல் பயணம் ஏன் அவசியம் என்று ஒரு கேள்வி எழுப்பினால் அதற்கு இன்றைய நிலையில் கிடைக்கும் பதில் பின்வருமாறு.

கடல் பயணத்தின் அவசியம் இரண்டு மட்டுமே

1.    பொருளீட்ட கடல் செல்லுதல்
2.    சுற்றுலா நிமித்தமாக
இவ்வுலகில் 90% வணிக பொருள் கடல் மார்கமாக தான் எடுத்துச் செல்கின்றது, என் என்றால்.. கடற்பயணம்
•    மிகவும் பாதுகாப்பானது
•    அதிக பொருள்கள் கொண்டு செல்ல முடியும்
•    சூழல் நட்பு உடையது
•    மிக மலிவானது

இக்காலத்திலேயே கடற்பயணம் இவ்வளவில் ஏற்புடையது என்றால் காற்றுவழி விமான சேவை வருவதற்கு முன்னதான காலத்தில் கப்பல் பயணம் மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பினை அளித்தது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

கடல் பயணம் செய்வதில் பல சவால்கள் உண்டு. நீரிலேயே அதிக நாள் பயணிக்க வேண்டும். நோய் வந்தால் சரி செய்து கொள்ள இயலாது. கப்பலில் ஏற்படும் கோளாறுகளால் அவதி ஏற்படலாம். உணவு, நீர் வசதி சராசரியாகப் பயன்படுத்தும் அளவிற்குக் கூட கிடைக்காது. இன்றைக்கே இவ்வளவு இடைஞ்சல்கள் இருக்கிறது என்றால் பழங்காலத்தில், செவ்விலக்கிய காலத்தில் இன்னும் எத்தனை நெருக்கடிகள் இருந்திருக்க இயலும் என்பதை யூகித்துக்கொள்ள வேண்டும்.  இவற்றைத் தாண்டி பழந்தமிழர்கள் காற்றின் போக்கறிந்து கலம்செலுத்தியுள்ளனர். பிற வெளிநாட்டினர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவ்வகையில் போக்கும் வரவும் கடல் பயணத்தில் பழங்காலந்தொட்டே இருந்துள்ளது. பட்டினப் பாலை என்ற நூல் காவிரிப்பூம்பட்டினத்தில் கடல் வணிகம் நடைபெற்றதைக் காட்டும் சிறந்த தமிழ் இலக்கியமாக இருக்கிறது. இதன்வழி பழைய கடற்கரை சார் நடைமுறைகளை அறியமுடிகிறது.

பழந்தமிழர் கடல் வணிகம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் ஒளவைமொழியும்,
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றன்
மொழியும், தமிழர்களின் உலகளாவிய சிந்தனைக்கும் பன்னாட்டுத்
தொடர்புக்கும் சான்றுகளாம். பழங்காலத்தில், தமிழர் பிற
நாடுகளுக்குக் கடற்பயணம் மேற்கொண்ட செய்தி முந்நீர் வழக்கம்

எனத் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ளது. முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை என்பது தொல்காப்பிய மொழி. இதன்வழி ஆண்களே கடற்பயணம் மேற்கொண்டனர் என்பது அறியத்தக்கது. மேலும் கலத்திற் பிரிவு என்று ஒரு பிரிவே தலைவனுக்குச் சுட்டப்படுகிறது.
பழந்தமிழர் பொருளீட்டுதலைத் தம் கடமையாகக் கருதினர். இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள பொருள்வயிற்
பிரிவு விளக்குகிறது. இப்பிரிவு காலில் (தரைவழிப்பிரிதல்) பிரிவு, கலத்தில் (நீர்வழிப் பிரிதல்) பிரிவு என இருவகைப்படும்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்றவற்றில் தலைவன் பொருள் வயிற்பிரிவு மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அக்காலகட்டத் தமிழ் இளைஞர்கள் பொருள் ஈட்டுவதற்காக அக்கம்பக்கத்து நாடுகளுக்குப் பயணம் செய்தார்கள்.     13 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மாக்கோபோலோகூட, “ஆண் மக்களுக்கு பதின்மூன்று வயதாகிவிட்டால் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் வைத்துக்கொள்வது இல்லை. அந்த வயதில் வணிகம் செய்து  பொருள் ஈட்டும் ஆற்றலை அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்றும் அவர்களை வளர்க்கும் பொறுப்பு அதற்குமேல் தங்களுக்கு இல்லை என்றும் பெற்றோர்கள் கருதுகிறார்கள். எனவே  அந்தப் பிள்ளையின் கையில் 20 அல்லது 24 குரோட்டோ அளவிற்குச் சமமான பணம் கொடுத்து அவர்களை வெளியில் அனுப்பிவிடுகிறார்கள். தங்கள் பெற்றோர்களது வருமானத்தில் கிடைக்கும் சோற்றில் ஒரு பருக்கையும் அவர்கள் தொடுவதில்லை” எங்கிறார் அவர். கி.பி. 13ஆம் நூற்றாண்டுத் தமிழ் இளைஞர்கள் கூட வணிகம் செய்து பொருள் ஈட்டியுள்ளனர் என்பதற்கு இக்கூற்று ஒரு வரலாற்று ஆதாரமாக உள்ளது எனவும், இத்தகைய ஒரு பொது மனோபாவம் சிலப்பதிகார காலத்திற்கு முன்பிருந்தே வேரூன்றி வளர்ந்து வந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் கோவலன் தான் தொழில்செய்து சம்பாதித்த பணத்தை மாதவியிடம் இழந்த பின்னர் சொந்தமாக வணிகம் செய்து பொருள் சம்பாதிக்கவே கண்ணகியோடு மதுரை போகிறான். அனால் அப்பொழுது அவனது தந்தையும் சரி, கண்ணகியின் தந்தையும் சரி பெரும் பணக்காரர்களாகவே உள்ளனர், எனினும் அவர்களிடம் பொருள் கேட்டுப் பெறுவது இழுக்கு என்பதால்தான் அவன் சுயமாகப் பொருள் சம்பாதிக்க மதுரை போகிறான். அன்றைய தமிழ்ச் சமுதாய மரபுப்படி சுயமாகப் பொருள் சம்பாதித்து வாழ்வது தான் ஒரு ஆண்மகனின் கடமை ஆகும். தனது குடும்பச் செலவுக்குத் தன் தந்தையிடம் பணம் வாங்குவது இழுக்கு என்றே அன்றையத் தமிழ்ச் சமுதாயம் கருதியது. பொருள்வயிற் பிரிவு என்பது திருமணத்திற்கு முன் தனது குடும்ப வாழ்விற்குத் தேவைப்படும் பொருளை ஒரு ஆண்மகன் சுயமாகச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் எங்கிற தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படைக் கருத்தில் இருந்து உருவான ஒரு இலக்கியக் கருத்தாக்கம் எனலாம். 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இக்கருத்து தமிழர்களிடம் இல்லாது போய்விடுகிறது.

சங்ககாலத் தமிழர்களின் வணிகத்தொடர்பு

siragu kadal payanam3

எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமிய, பாபிலோனியா, சீனம் ஆகிய நாடுகள் தமிழரின் பொருள்களை விரும்பிப் பெற்றன.ஏலமும் இலவங்கமும் இஞ்சியும் மிளகும் மேற்காசிய நாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. தமிழ்நாட்டில், பிற நாட்டார் உள்ளத்தை கவரும் பல பொருள்கள் மிகுதியாகக் கிடைத்தன. அவற்றுள், முத்தும் பவளமும் ஆரமும் அகிலும் வெண்துகிலும் சங்கும் குறிப்பிடத்தக்கன. பழந்தமிழர், கிரேக்கரையும் உரோமானியரையும் யவனர் என அழைத்தனர்.

கப்பல் :

பழங்காலத்திலேயே தமிழகத்தில் பலவகையான கப்பல்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு பெரிய கப்பலும், மதில்சூழ்ந்த கோட்டைபோலத் தோன்றுமாம். அஃதாவது, நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள், அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய மருதநில அரசனது கோட்டை. அக்கோட்டையின் தோற்றமானது, நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

கடலும் மரக்கலங்களும் :

ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பெளவம், பரவை, புணரி என்பவை கடலைக் குறிக்கும் தமிழ்சொற்கள். இவ்வாறே மரக்கலத்துக்கும் தமிழ்மொழியில் பெயர்கள் பல வழங்குகின்றன, அவை : கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் என்பன. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான காலத்தைக் குறிக்கும். இச்சொற்களைக் கொண்டே பண்டைத் தமிழர்களின் கடற்பயணம் பற்றித் தெளிவாக அறியலாம். உப்பங்கழிகளில் செலுத்துதற்குரிய சிறிய படகுகளும் கடலில் செலுத்துதற்குரிய பெரிய நாவாய்களும் அன்று இருந்தன. கடலில் செல்லும் பெரிய கலம் நாவாய் எனப்படும். புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால், அலைப்புண்டு கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன.

அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது. பெரிய நாவாய்கள் காற்றின் துணைகொண்டே இயங்கின. அவை பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. இதற்குக் காற்றானது, எவ்வெப்போது எவ்வெத்திசை நோக்கி வீசும் என்பதனைத் தமிழர் நன்கு உணர்ந்திருந்தனர். கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைப் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
நாவாய் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.  அவை பின்வருமாறு.
நாவாய் சூழ்ந்த நளி நீர் படப்பை – பெரும் 321
ஆடு இயல் பெரு நாவாய்/மழை முற்றிய மலை புரைய – மது 83,84
விழுமிய நாவாய் பெரு_நீர் ஓச்சுநர் – மது 321
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 379
தூங்கு நாவாய் துவன்று இருக்கை – பட் 174
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை – நற் 295/6
ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் – பரி 10/39
நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ – அகம் 110/18
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் – புறம் 13/5
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி – புறம் 66/1
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி – புறம் 126/15
என்ற குறிப்புகள் பழங்காலத்தில் ஓடிய நாவாய்கள் பற்றிய செய்திகளை அறிவிக்கின்றன.
கலம் என்ற சொல்லில் அக்காலக்  கப்பல் குறிக்கப்பெற்றுள்ளது.
போக்கு இல் பொலம் கலம் நிறைய பல் கால் – பொரு 86
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 350
மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி – பெரும் 477
நலம் சான்ற கலம் சிதறும் – மது 104
கள்ளின் இரும் பைம் கலம் செல உண்டு – மது 228
நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக – மது 539
மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப – மது 685
நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 695
நேர்வரும்-குரைய கலம் கெடின் புணரும் – குறி 14
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – மலை 50
பலர் புறங்கண்டு அவர் அரும் கலம் தரீஇ – மலை 71
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின் – மலை 577
கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு – நற் 182/5
ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம்/பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம் – நற் 308/9,10
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/11
ஆசு இல் கலம் தழீஇ அற்று – நற் 350/9
பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போல – குறு 29/2
பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும் – ஐங் 192/2
பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்த – ஐங் 316/1
நாடு படு நன் கலம் தரீஇயர் – ஐங் 463/4
வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப – பதி 18/3
நன் கலம் தரூஉம் மண் படு மார்ப – பதி 21/19
சிறு மகிழானும் பெரும் கலம் வீசும் – பதி 23/9
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 37/4
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 43/20
கலம் செல சுரத்தல் அல்லது கனவினும் – பதி 44/5
அரும் கலம் தரீஇயர் நீர் மிசை நிவக்கும் – பதி 52/3
வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து அவர் – பதி 53/1
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/8
பாடு சால் நன் கலம் தரூஉம் – பதி 59/18
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு – பதி 64/5
தெண் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை – பதி 67/4
பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர் – பதி 71/21
கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம்/பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம் – பதி 74/5,6
நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் – பதி 83/7
சென்மோ பாடினி நன் கலம் பெறுகுவை – பதி 87/1
களிறொடு கலம் தந்து – பதி 90/7
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து – பதி 91/1
மென் தோள் மேல் அல்கி நன் கலம் இன்று – பரி 9/32
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப – பரி 11/79
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி – பரி 19/12
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய – கலி 27/11
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி – கலி 83/28
தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம் – கலி 111/1
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப – கலி 132/7
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் – கலி 133/17
கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன் – கலி 134/24
கலம் சிதை இல்லத்து காழ் கொண்டு தேற்ற – கலி 142/64
கலம் தரல் உள்ளமொடு கழிய காட்டி – அகம் 3/12
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை – அகம் 16/9
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி – அகம் 30/9
விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப – அகம் 54/1
நன் கலம் தரூஉம் வயவர் பெருமகன் – அகம் 69/17
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/15
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும் – அகம் 93/6
நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி – அகம் 124/1
கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம் – அகம் 126/12
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்/பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் – அகம் 127/7,8
நசையின் வாழ்நர்க்கு நன் கலம் சுரக்கும் – அகம் 143/11
யவனர் தந்த வினை மாண் நன் கலம்/பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகம் 149/9,10
தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும் – அகம் 152/7
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கை – அகம் 213/20
நலம் சால் விழு பொருள் கலம் நிறை கொடுப்பினும் – அகம் 280/5
கலம் சுடு புகையின் தோன்றும் நாட – அகம் 308/6
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி – அகம் 331/11
அ எயில் கொண்ட செய்வு_உறு நன் கலம்/பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கி – புறம் 6/15,16
பரிசிலர்க்கு அரும் கலம் நல்கவும் குரிசில் – புறம் 14/10
வளி புடைத்த கலம் போல – புறம் 26/2
புகாஅர் புகுந்த பெரும் கலம் தகாஅர் – புறம் 30/13
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடி – புறம் 32/1
இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா – புறம் 56/17
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் – புறம் 56/18
அன்பு உறு நன் கலம் நல்குவன் நினக்கே – புறம் 67/14
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை – புறம் 126/16
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து – புறம் 148/3
பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம்/பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என – புறம் 150/18,19
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ – புறம் 160/9
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி – புறம் 160/11
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு – புறம் 160/21
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப – புறம் 161/30
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/5
அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை – புறம் 171/10
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும் – புறம் 198/15
அரு விலை நன் கலம் அமைக்கும்_காலை – புறம் 218/4
கலம் செய் கோவே கலம் செய் கோவே – புறம் 228/1
கலம் செய் கோவே கலம் செய் கோவே – புறம் 228/1
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 228/4
கலம் செய் கோவே கலம் செய் கோவே – புறம் 256/1
கலம் செய் கோவே கலம் செய் கோவே – புறம் 256/1
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 256/7
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே – புறம் 299/7
கலம் தந்த பொன் பரிசம் – புறம் 343/5
கலம் கழாஅலின் துறை கலக்கு_உற்றன – புறம் 345/4
உறந்தை அன்ன உரை சால் நன் கலம்/கொடுப்பவும் கொளாஅ – புறம் 352/10,11
அரும் கலம் நீரொடு சிதறி பெருந்தகை – புறம் 361/5
கலம்_கலம் தேறல் பொலம் கலத்து ஏந்தி – புறம் 361/18
கலம்_கலம் தேறல் பொலம் கலத்து ஏந்தி – புறம் 361/18
வீறு சால் நன் கலம் வீசி நன்றும் – புறம் 362/15
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி – புறம் 367/8
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் – புறம் 384/20
கடலே கால் தந்த கலம் எண்ணுவோர் – புறம் 386/14
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும – புறம் 389/15
அரும் கலம் வரவே அருளினன் வேண்டி – புறம் 395/28
அரும் கலம் நல்கியோனே என்றும் – புறம் 397/18
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம்/கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி – புறம் 400/11,12

என்ற அளவில் கலம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத் தொகுப்பில் காணக்கிடைக்கிறது. இவ்வகையில் தமிழர்களுடன் ஒட்டிய வாழ்வுடையதாக கப்பல் பயணம் இருந்தது என்பதை அறியமுடிகிறது.

siragu tholliyal7துறைமுகங்கள் :

தமிழகத்தில் நடைபெற்றுவந்த வாணிகத்தின் பயனாகப் பல
துறைமுகங்கள் கடற்கரைப் பட்டினங்களாகச் சிறந்து விளங்கின.
அவற்றுள் காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை ஆகியவை
குறிப்பிடத்தக்கன. முசிறி, சேர மன்னனுக்குரிய துறைமுகம், அங்குச்
சுள்ளி என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள்,
ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்து நின்றன.

அக்கலங்களுக்கு உரிய யவனர்கள், பொன்னைச் சுமந்து வந்து, அதற்கு ஈடாக மிளகை ஏற்றிச் சென்றார்கள். இச்செய்தியை, அகநானூறு  தெரிவிக்கிறது. பாண்டிய நாட்டு வளத்தைப் பெருக்கியது கொற்கைத் துறைமுகம், இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததனை வெனிசு நாட்டறிஞர் மார்க்கோபோலோ குறித்துள்ளார். இங்குச் சங்க காலத்தும் முத்துக்குளித்தல் நடந்தது. ஏற்றுமதிப் பொருள்களில் முத்தே முதலிடம் பெற்றது.

மதுரைக்காஞ்சியும் சிறுபாணாற்றுப்படையும் கொற்கை முத்தைச் சிறப்பிக்கின்றன. விளைந்து முதிர்ந்த விழுமுத்து என மதுரைக்காஞ்சி கூறும். கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர்களைப் பட்டினம், பாக்கம் என்றழைப்பர். அவ்வூர்களில் பெரும்பாலும் வணிகர்களே வாழ்ந்து வந்தார்கள். சோழநாட்டின் துறைமுகமாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் (பூம்புகார்), சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன. இங்குக் கப்பலிலிருந்து நிலத்தில் இறக்கப்படுவனவும், நிலத்திலிருந்து கப்பலில் ஏற்றப்படுவனவுமாகிய அளவில்லாத பண்டங்கள் முன்றிலில் மலைபோகக் குவிந்து கிடந்தன.

ஏற்றுமதி இறக்குமதி :

siragu kadaliyal3

பழந்தமிழகத்தின் வாணிகப்பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையிலும் மதுரைக்காஞ்சியிலும் காணப்படுகின்றன. இங்கிருந்து ஏற்றுமதியான பொருள்களும் இரத்தினம், முத்து, வைரம், மிளகு, கருங்காலி, கருமருது, தேக்கு, சந்தனம், வெண்துகில், அரிசி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி முதலியன குறிப்பிடத்தக்கவை. தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன. சீனத்துப் பட்டும் சருக்கரையும் தமிழகத்துக்கு இறக்குமதி ஆயின. கரும்பு, அதியமானின்முன்னோர் காலத்தில் சீனாவிலிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது. கடற்பயனம்பற்றிய கல்வியறிவு இந்நாளில் மக்களை எட்டியுள்ளது. கடல்சார் பல்கலைக்கழகத்தின் வாயிலாகப் பட்டம், பட்டயக்கல்வி கற்பிக்கப் பெற்று வருகின்றன. இத்துறையில் பயில்வோருக்குப் பயிற்சியும் பணிவாய்ப்பும் நிரம்ப உள்ளன. எனவே, மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம் என்னும் பாரதியின் கனவு இன்று நனவாகி உள்ளது.


சுப. இராமநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கடல் பயணம்”

அதிகம் படித்தது