மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கனிமொழி: கருணாநிதி பூரண குணமடைந்துவிட்டார்; நாளை வீடு திரும்புவார்



Dec 22, 2016

கடந்த 15ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்து சிகிச்சை அளித்து வந்தனர்.

siragu-karunanidhi_kanimozhi

கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக நேற்று காவேரி மருத்துவமனை கூறியது. மேலும் அவர் தொலைகாட்சி பார்க்கும் புகைப்படம் ஒன்றையும் அம்மருத்துவமனை வெளியிட்டது.

இந்நிலையில் இன்று கருணாநிதியின் மகள் கனிமொழி, திமுக தலைவர் மு.கருணாநிதி பூரண குணமடைந்துவிட்டார், நாளை வீடு திரும்புவார் என கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கனிமொழி: கருணாநிதி பூரண குணமடைந்துவிட்டார்; நாளை வீடு திரும்புவார்”

அதிகம் படித்தது