மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கருணாநிதி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து நவம்பர் 24ம் தேதி மனித சங்கிலி போராட்டம்



Nov 19, 2016

சென்ற நவம்பர் 8ம் தேதி பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததிலிருந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அன்றாட வேலைக்குச் செல்லாமல் வங்கிகளிலும், ஏ.டி.எம்-லும் வரிசையில் நின்று வேதனைகள் அனுபவித்து வருகின்றனர்.

siragu-karunanidhi

பாராளுமன்றத்தில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று கோஷமிட்டும் பிரதமர் பதிலளிக்கவில்லை. மற்ற மாநில அரசுகள் இந்த ரூபாய் நோட்டு விவகாரத்தில் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு மட்டும் இன்னும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

எனவே மத்திய, மாநில அரசை கண்டித்து வரும் நவம்பர் 24ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப் போவதாக தி.மு.க தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் தலைமையில் இந்த மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெறும். எனவே வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்களும் இந்தில் கலந்து கொள்ளுமாறு கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கருணாநிதி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய மாநில அரசை கண்டித்து நவம்பர் 24ம் தேதி மனித சங்கிலி போராட்டம்”

அதிகம் படித்தது