மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கரோனாவும் உலக நாடுகளில் அதன் பரவலும்

வெங்கட் நடராஜன்

Apr 25, 2020

siragu coronavirus6

சீனாவின் வூஹான் நகரில் ஆரம்ப்பித்து உலகம் முழுதும் பரவிக்கொண்டுள்ள ஒரு வித வைரஸ் இந்த கரோனா. இதன் நோய் பாதிப்பை விட இது ஏற்படுத்திய பீதி மற்றும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம்.

உலகம் முழுக்க பரவினாலும், இதன் தாக்கம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலேயே அதிகமாக உள்ளது. மூன்றில் ஒரு பகுதி மக்கள்தொகை கொண்ட ஆசியா, ஆப்பிரிக்காவைக் காட்டிலும் வெறும் 15% கொண்ட ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையே அதிகம் தாக்கியுள்ளது. ஏன் தென் அமெரிக்காவில் கூட அவ்வளவு பாதிப்பு இல்லை.

காரணம் என்ன?

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பரவ மிக முக்கியக்காரணம் விமான போக்குவரத்து. ஆனால் உள்நாட்டிற்குள் பரவுவது அந்நாட்டில் தட்பவெப்ப நிலை மற்றும் அந்நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அமைகிறது.

விமானப் போக்குவரத்து

புள்ளி விவரப்படி வூஹான்நகரில் இருந்து அதிக விமானங்கள் டோக்கியோ, மும்பை, ஜகர்தா, பாங்காக், தெஹ்ரான், கோலாலம்பூர், சிங்கப்பூர், இஸ்தான்புல், துபாய், ஹாங்காங் போன்ற நகரங்களுக்கே அதிக அளவில் நேரடியாக இயக்கப்படுகின்றன. இதில் இஸ்தான்புல் தவிர அனைத்தும் ஆசிய நகரங்கள். பாரிஸ், பிராங்கபார்ட், சான் பிரான்சிஸ்கோ, ஆம்ஸ்டெர்டாம் போன்ற மேற்கத்திய நகரங்களுக்கு குறைவான அல்லது connecting எனப்படும் இணைப்பு சேவைதான் இயக்கப்படுகிறது. அப்படி பார்த்தால்கூட இது ஆசியாவில் தான் விரைவாக பரவியிருக்க வேண்டும்.

தட்பவெப்ப நிலை

பொதுவாக வைரஸ் கிருமிகள் குளிர்காலங்களில் நீண்ட நாள் வாழ்வதால் ஃப்ளு, சளி, காய்ச்சல் போன்றவை அதிகம் பரவுகிறது. கரோனவும் ஒரு வைரஸ் என்பதால், இது ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற வெப்ப நாடுகளில் அவ்வளவாக பரவவில்லை என்றே தோன்றுகிறது. மாறாக குளிர் பிரதேசங்களான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையே அதிகம் தாக்குகிறது.

siragu corona virus2நோய் எதிர்ப்பு சக்தி

அது மட்டுமல்ல, எதற்கெடுத்தாலும், சோப்பு போட்டு கை கழுவுவதும், கிருமி நாசினியும் கையுமாய் அலையும் மேற்கத்திய கலாச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே உள்ளது. வளர்ந்த நாடுகளின் சுத்தமான கட்டமைப்பு உடல் உழைப்பில்லாத வசதியான வாழ்கை முறை போன்றவையும் குறைந்த நோய் எதிர்ப்பிற்கு ஒரு காரணமாகும். தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற வளரும் நாடுகளில், மக்கள் கல் மண் என்று பாராமல், இயற்கையோடு இணைந்து உழைத்து வாழ்வதால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 6 கோடி மக்கள் வரை ஃப்ளு பரவுகிறது. அதில் 60 ஆயிரம் பேர் வரை இறந்து போகிறார்கள். ஆனால் இந்தியாவில் ஒரு சில ஆயிரம் மட்டுமே பரவுகிறது அதில் சில நூறு பேர்களே இறந்து போகிறார்கள். உடலில் உள்ள நோய் எதிர்ப்பு இதற்கு முக்கிய காரணம்.

பரவல் vs அறிகுறி

கொரோனா உடலில் பரவியுள்ளதா இல்லையா என்பதை விட அந்த உடலில் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகிறதா அல்லது பாதிப்பு இருக்கிறதா என்பதே முக்கியம். இந்தியா உட்பட்ட ஆசிய நாடுகளில் பரிசோதனை செய்து பார்த்தால், அமெரிக்காவை விட அதிகம் மக்களுக்கு கூட பரவியிருக்கலாம். ஆனால் அது தேவையில்லாத ஒன்று. கொரோனா நுண்கிருமி ஒரு ஒடுங்கு காரணியாக உடலில் இருக்கும் வரை எந்த அறிகுறியும் தெரிவதில்லை. அறிகுறி இல்லாத வரை எந்த பாதிப்பும் இல்லை. பாதிப்பு இல்லை எனில் கரோனவைப் பற்றிய அச்சமும் தேவையில்லை.

ஊரடங்கு

இந்தியா போன்ற ஆசிய நாடுகள் ஊரடங்கை சிறப்பாகவே கடைபிடித்து வருகின்றன. நோய் வேகத்தை குறைக்க இது உதவியது. இருந்தாலும், இந்த தொற்று எப்பொழுது ஆரம்பித்தது என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியாது. சீன அரசாங்கத்தின் கடுமையான சட்டதிட்டங்களை மீறி இந்த உண்மை வெளியே வருவது கடினமே. இருந்தாலும், ஊரடங்கிற்கு சில மாதங்களுக்கு முன்னரே இந்நோய் மற்ற நாடுகளில் பரவ ஆரம்பித்திருக்க வேண்டும். அது சமூக தொற்றாகவும் இந்நேரம் மாறியிருக்க வேண்டும்.

ஐரோப்பிய நாடான சுவீடன் ஊரடங்கு எதையும் அமல்படுத்தவில்லை, இருந்தாலும் அங்கு பெரிய பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே கரோனாவின் பாதிப்பு ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலை மற்றும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே உள்ளது. ஊரடங்குநோய் பரவலை சற்று தள்ளி போடுமே தவிர, அது முக்கியக் காரணியாக இருக்க முடியாது அது நீண்ட நாள் தீர்வும் ஆகாது. மேலும் கரோனாவிற்கு அஞ்சி வீட்டிலேயே முடங்கினால், பொருளாதாரம் மட்டுமல்ல நோய் எதிர்பு சக்தியும் சேர்ந்தே முடங்கிவிடும். இதனால் கரோனோவை விஞ்சும் பல்வேறு வியாதிகளும், பிரச்சினைகளும் தலைதூக்கும் அபாயம் ஏற்படும்.

எப்படிவந்தது?

கரோனா வௌவால் போன்ற விலங்குகளில் இருந்து வந்ததா அல்லது செயற்கையாக ஆய்வகத்தில் இருந்து வந்ததா என்ற விவாதம் ஒரு புறம் இருக்க, இது பல காலமாக மனிதர்களிடம் இருந்திருக்கலாம் ஆனால் நோய் எதிர்ப்பு அதிகம் இருந்ததினால் அப்போது யாருக்கும் தெரியவில்லை பரவவும் இல்லை என்ற கருத்தும் நிலவுகிறது. மாறிவிட்ட வாழ்க்கை சூழலால் நோய்எதிர்ப்பு குன்றிய நிலையில் இதன் வீரியம் தலை எடுத்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.

என்னசெய்யலாம்?

நோய்எதிர்ப்புசக்தியை எப்படி உடலில் அதிகரிப்பது என்பதை அறிந்து அனைவரும் அதற்கான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் மட்டுமல்லாது, பல்வேறு துறை வல்லுநர்கள் மற்றும் பெரியோர்கள் கலந்து ஆலோசித்து இதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும். அரசாங்கம் இதை ஒருங்கிணைத்து மக்களிடம் நடைமுறைபடுத்த வேண்டும்.

இது கரோனாவிற்கு மட்டுமல்ல இது போல் இன்னும் எதிர்காலத்தில் வரக்கூடிய பல்வேறு நோய்களுக்கும் நிரந்திரத் தீர்வாக இருக்கும்.


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கரோனாவும் உலக நாடுகளில் அதன் பரவலும்”

அதிகம் படித்தது