மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கர்நாடக அரசு: தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலை



Dec 24, 2016

கர்நாடகாவின் முக்கிய நகரங்களான மங்களூர், பெங்களூர், மைசூர், பெல்காம் போன்றவற்றில் தமிழர்கள் உட்பட பல்வேறு மாநில தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக அரசு ‘கர்நாடக தொழில் வேலை வாய்ப்பு விதிமுறை 1961’ என்ற சட்டதிருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி கர்நாடக மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலை என்று கொண்டுவர உள்ளது. இந்த சட்டத்தின்படி கன்னடர்களுக்கே நூறு சதவிகித வேலை கிடைக்கும். இதில் கன்னட மாற்றுத்திறனாளிகளுக்கு 5சதவிகித ஒதுக்கப்படவேண்டும் என்ற ஷரத்தும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

siragu-karnataka

இதன் அடிப்படையில் கர்நாடக அரசிடமிருந்து நிலம், நீர், மின்சாரம் மற்றும் வரி சலுகை பெரும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 100சதவிகிதம் கன்னடர்களுக்கே வேலை தர வேண்டும் என்ற ஷரத்து சட்ட திருத்தத்தில் இடம் பெற்றுள்ளதாக அரசு அறிவிக்கையில் அறிவித்துள்ளது.

இந்த விதிமுறையிலிருந்து தகவல் தொழிற்நுட்பம்(ஐ.டி), உயிரி தொழில்நுட்பம்(பி.டி), புதிய தொழில் முனைவோர், அறிவுசார் தொழில் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனங்களுக்கான விதிவிலக்கு சட்ட திருத்தம் அமலுக்கு வந்த பிறகு ஐந்து வருடங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்று கூறியுள்ளது.

பிற மாநில ஊழியர்கள் பயப்படத்தேவையில்லை. குரூப் சி, டி போன்ற ஃப்ளூ காலர் வேலைகளுக்குத்தான் இந்த விதிமுறை. ஏற்கனவே இந்த பணியிடங்களில் 90சதவிகிதம் கன்னடர்கள் உள்ளனர், அதை 100சதவிகிதம் ஆக்குவதே இந்த சட்டத்திருத்தத்தின் நோக்கம் என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கர்நாடக அரசு: தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே வேலை”

அதிகம் படித்தது