மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கற்கண்டு சாதம்

ரா.பொன்னழகு

Mar 14, 2015

தேவையான பொருட்கள்:

பச்சரிசி           – 1 கப்

பாசிப்பருப்பு       – 2 ஸ்பூன்

கற்கண்டு பெரியது   – 1 ½கப்

நெய்             – 3 ஸ்பூன்

முந்திரிப் பருப்பு     – 10 எண்ணிக்கை

ஏலக்காய்         – 2 எண்ணிக்கை

கிஸ்மிஸ் பழம்     – 10 எண்ணிக்கை

தேங்காய்                     – ½கப்

செய்முறை:

இரண்டு டம்ளர் தண்ணீரில் அரிசி பருப்பை வேகவைக்கவும். நெய்முந்திரி பருப்புகிஸ்மிஸ் பழம் இவற்றை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயை பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். வேகவைத்த அரிசி பருப்புடன் வதக்கிய அனைத்தையும் கொட்டி கிளறி இறக்கவும். சுவையான கல்கண்டு சாதம் தயார்.

……

கோழி வரமிளகாய் வருவல்

தேவையானவை:

கோழி கறி       – ½கிலோ

சிறிய வெங்காயம்   – 100 கிராம்

வரமிளகாய்       – 10 எண்ணிக்கை

(சிறிதளவு -  சோம்பு, பட்டை, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம், உப்பு, எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது)

செய்முறை:

சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை,சோம்பு,வரமிளகாய் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும். அதன்பின் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்த கறியை சேர்த்து நன்கு வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வெந்தவுடன் சோம்புமிளகுசீரகம் இவற்றை கொரகொரப்பாக பொடி செய்து இதில் போடவும். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை அதில் தூவவும். சோறுடன் பரிமாறவும்.


ரா.பொன்னழகு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கற்கண்டு சாதம்”

அதிகம் படித்தது