மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கலிபோர்னியா விரிகுடாவில் மாவீரர்தினம்

க.தில்லைக்குமரன்

Dec 6, 2014

maaveerar dhinam2கலிபோர்னியா விரிகுடாப் பகுதி மாவீரர் நாள் பாஸ்டர் சிட்டியில் நவம்பர் 27 அன்று மாலை சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்வை வடகலிபோர்னியா வாழ் தமிழர்களும் இளந்தமிழர் அணியும் இணைந்து நடத்தியது.

நிகழ்வின் தொடக்கமாக மாவீர்களுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் சரியாக 6.06 மணிக்கு மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. பின்னர் அனைவரும் மாவீரர்களுக்கு விளக்கினை ஏற்றி மரியாதை செய்தனர். வணக்கம் செலுத்தும் வேளையில் தமிழீழ விடுதலை புலிகள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாளில் பேசியது ஒளிபரப்பப்பட்டது. உணர்ச்சிகளை பிழியும் உரைகளும், காட்சிகளும் காட்டப்பட்டது அனைவரின் மனதையும் தொட்டது, குறிப்பாக அங்கிருந்த இளைதலைமுறையினருக்கு இந்நாளின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் உணர்த்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஈழத்தை சேர்ந்தவர் அங்கு குடிகொண்டிருக்கும் நிலைமையை வைத்து எழுதிய ஒரு கவிதையை திருமதி. யசி அவர்கள் படித்தது அங்கு இருந்தவர் அனைவரின் கண்களையும் நனைத்தது. இந்த சூழலில் இருந்து நம்தமிழ்ச்சமூகம் விரைவில் விடுதலை பெரும் என்ற நம்பிக்கையுடன் இளந்தமிழர் அணியின் சார்பாக விவேக் கணேசன் பேசினார். தமிழர்கள் உணர்வு மிக்கவர்கள் அது உணர்வுடன் நின்றுவிடாமல் ஈழத்தமிழர், தமிழகத்தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் என உலகில் வாழும் மூன்று பிரிவு தமிழர்களும் ஒன்றாக இணைந்து மாபெரும் சக்தியாக உருவெடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பின்னர் ஈழஅரசியல் வரலாற்றையும் மாவீரகளின் போராட்டம் ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் மாவீரர்களின் தியாகத்தை பற்றியும் சிறு உரையை படித்து இந்த வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டி உறுதியெடுத்து நிகழ்வு முடிக்கப்பட்டது.

maaveerar dhinam1அங்கு திரண்ட மக்களின் கூட்டம் நமக்கு உணர்த்தியது எங்கள் மாவீரர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளனர், அந்த விதைகள் பிரம்மாண்டமான மரமாக எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியது. மேலும் உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் தத்தம் நாடுகளில் மாவீரர் நாளை கொண்டாடிவரும் செய்தி செவிக்கு தேனூட்டுகிறது. தமிழகம் முழுதும் இந்த வாரம் முழுவதும் மாவீரர்களுக்கான கொண்டாட்டமாக கொண்டாடிவருவது நல்ல நம்பிக்கையைத் தந்து வருகிறது. தமிழகத்திலும், புலத்திலும் மாவீரர் நாள் கொண்டாடுவது வழக்கம் அது நமது கடமைகளுள் ஒன்றாகிவிட்டது. தமிழகத்தில் காவல்துறையின் அடக்குமுறைகளையும், தடைகளையும் தாண்டி மிக பாரியளவில் இந்த ஆண்டு மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது, தமிழகத்தில் எழுச்சி இன்னும் குறையவில்லை என்பதைக் காட்டுகிறது.

தமிழகத்திலும், புலத்திலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு பெரிய செயலல்ல. ஆனால் தமிழீழத்தில் நடத்துவதுதான் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஈழத்திலும் இவ்விழா பல அடக்குமுறைகளுக்கிடையில் நடந்துதான் வருகிறது. இந்த ஆண்டும் இராணுவத்தின் எச்சரிக்கையும் புறக்கணித்து யாழ் பல்கலைக்கழகத்திலும்., தமீழழம் முழுதிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்படங்கள் நம்மை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தலைவர் ஏற்றிய தீ என்றும் அணையாது என்பதையே காட்டுகிறது. வெப்பம் என்று எரிமலையாகும் என்பதுதான் கேள்வி, அதுவரை தமிழகமும், புலமும் அவர்களுக்கு கேடயமாக இருந்து தலைவர் ஏற்றிய தீயை தொடர்ந்து சுடர்விட்டு ஒளிபரப்ப வேண்டும்.

தமிழர் தாகம் தமிழீழத் தாயகம்

வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!!


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கலிபோர்னியா விரிகுடாவில் மாவீரர்தினம்”

அதிகம் படித்தது