மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைத்தொகுப்பு (நினைவுகள், வலி தரும் சொல்)

குமரகுரு அன்பு

Dec 10, 2022

நினைவுகள்

siragu memories
மலையிலிருந்து
சரியாத பாறைகளான
நினைவுகளைத் தாங்கியபடி
அருவியைப் பொழிகிறேன்!!
மரங்களே! வேர்களால் எனை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்!!
*****

வலி தரும் சொல்

siragu maravattai
சலவைக்கல்லுக்குப் பக்கத்தில்
பாசிப் படிந்த நீர்ப் பாதையில்
மெதுவாக வளைந்து வளைந்து சென்று கொண்டிருந்ததொரு
சிவப்பு நிற மரவட்டை!!
சொட்டும் வியர்வையை கைகளில் துடைத்தபடி
உள்பாவாடைக்கு சோப்பு போட்டு கொண்டிருந்தாள் பெண்ணொருத்தி!!
சோப்புக் குமிழ்கள்
நீர்ப்பாதையில்
பிம்பங்களை சுமந்து விழுந்து கொண்டிருந்தன.
நீரோட்டத்தின் நடுவே
வளைந்து வளைந்து சென்ற மரவட்டை,
ஒவ்வொரு முறை நுரைப் பட்டதும்
சுருண்டு மீண்டும் நிமிர்ந்து சென்றபடியிருந்தது…!!
தாங்கவொண்ணா வலி தரும் சொல்லொன்று பட்டதும் நானும்தான் சுருண்டு கொள்வேன்!!

குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைத்தொகுப்பு (நினைவுகள், வலி தரும் சொல்)”

அதிகம் படித்தது