மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரியிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட மீண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு



Dec 15, 2016

கர்நாடகா தமிழகத்திற்கு 192 டி.எம்.சி தண்ணீர் ஜூன் 1 முதல் மே 31 வரை ஓராண்டிற்கு வழங்க வேண்டும். அதில் நடப்பாண்டு 59.5 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது, மீதமுள்ள 115 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

siragu-cauvery_water

இவ்வழக்கின் மீதான விசாரணை டிசம்பர் 15 முதல் துவங்கும் எனவும், அதுவரை 2000 கன அடி நீர் திறக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடக அரசு சார்பில் கர்நாடகத்தில் வறட்சி நிலவுவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு விசாரணையை ஜனவரி 4ம் தேதி ஒத்திவைத்து, அதுவரை தமிழகத்திற்கு 2000 கன அடி நீர் திறப்பை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரியிலிருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விட மீண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு”

அதிகம் படித்தது