மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு



Sep 26, 2016

தமிழகத்துக்கு 6000 கனஅடி நீர் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடக அரசு நிறைவேற்றவில்லை.

siragu-supreme-court

சென்ற 23ந்தேதி சிறப்பு சட்டசபையைக் கூட்டி காவிரி நீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது, அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றியது.

இந்நிலையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அம்மனுவில் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தர முடியவில்லை என்றும், தண்ணீரை டிசம்பரில் சேர்த்து தருகிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு அளித்த மனுவை எதிர்த்து, தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

இதில் கர்நாடக அரசு அளித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, மீண்டும் அளித்த புதிய மனுவின் மீது விசாரணை தேவையில்லாதது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி: உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா புதிய மனு”

அதிகம் படித்தது