மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீரின் சர்வதேச எல்லையில் பாக்., தொடர்ந்து தாக்குதல்



Oct 28, 2016

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் எதிர் தாக்குதல் நடத்துவதால் இந்திய-பாக்., எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

siragu-pakistan

இதனிடையில் இந்தியாவின் பாக்., தூதரகத்தில் பணியாற்றிய ஊழியரை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து பாக்., கண்டனம் தெரிவித்ததுடன் நேற்று இரவு பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பாம்பவாலேவுக்கு சம்மன் அளித்துள்ளது.

தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எல்லை பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி-யை  தொடர்புகொண்டு நமது ராணுவம் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீரின் சர்வதேச எல்லையில் பாக்., தொடர்ந்து தாக்குதல்”

அதிகம் படித்தது