மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கியான்ட் புயலால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை



Oct 27, 2016

தற்போது உருவாகியுள்ள கியான்ட் புயல் மேற்கு-தென்மேற்காக நகர்ந்து ஆந்திர கடற்கரையை தாக்கும் அபாயம் உள்ளதால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

siragu-puyal

கியான்ட் புயலால் குண்டூர், விஜயவாடா, காக்கிநாடா, ஓங்கோல், காவ்லி, திருப்பதி, நெல்லூர் போன்ற இடங்களில் மழை பெய்யலாம் எனவும், ஆந்திர மாநிலத்தில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கியான்ட் புயலால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை”

அதிகம் படித்தது