மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குடியரசு தலைவர் உரையுடன் துவங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்



Jan 31, 2017

நடப்பாண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துவரப்பட்ட குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி இக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

siragu-parliament

இந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது. முதல் அமர்வு பிப்ரவரி 9வரை நடைபெறும், இரண்டாவது அமர்வு மார்ச் 9ம் தேதி துவங்கி ஏப்ரல் 12ல் முடிவடைகிறது.

இக்கூட்டத்தில் முதன்முறையாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை சேர்த்து தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று(31.01.17) மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.

கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நாளை(01.02.17) பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை சேர்த்து தாக்கல் செய்யவுள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி.

இக்கூட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்து நேற்று(30.01.17) அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அதில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்கு மத்திய அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடியரசு தலைவர் உரையுடன் துவங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்”

அதிகம் படித்தது