மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குளிர்பான தொழிற்சாலைகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை



Apr 22, 2017

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் மணிமுத்தாறு, பாபநாசம் அணைகள் வறண்டு விட்டது. எனவே கங்கை கொண்டானில் உள்ள குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் தரப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Siragu Thamirabarani_River

இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் முதல் குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது. சென்ற மாதம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அவ்வழக்கின் விசாரணையில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதி அளித்தது மதுரை உயர்நீதிமன்றம். பின் கடுமையான வறட்சி நிலவுவதால் அங்குள்ள கலெக்டர் ஏப்ரல் 30வரை குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை விதித்தார்.

தற்போது அம்மாவட்ட நிர்வாகம் குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்க தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, எனவே தாமிரபரணி ஆற்றிலிருந்து குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதை நிறுத்த தாமிரபரணி வடிநில கோட்ட பொறியாளர் கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

குளிர்பான நிறுவனங்கள் மட்டுமல்லாது ஆற்றில் தண்ணீர் எடுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் தடை விதித்துள்ளார் கலெக்டர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குளிர்பான தொழிற்சாலைகள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க தடை”

அதிகம் படித்தது