மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கேரள அரசு: சபரிமலை கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை



Dec 27, 2016

சபரிமலை கோவில் அமைந்த காலம் முதல், பத்து வயது முதல் ஐம்பது வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் பெண்கள் சபரிமலையில் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்ற வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

siragu-sabarimala

சனி சிங்னாபூர், ஹாஜி அலி தர்கா போன்ற வழிபாட்டு தளங்களில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என பல போராட்டங்களில் ஈடுபட்டவர் பெண்ணிய சமூக ஆர்வலர் திருப்தி தேசாய். இவர் அடுத்த மாதம் நூறு பெண்களுடன் சபரிமலைக்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாரம்பரிய நடைமுறைகளை விட்டுக்கொடுக்க முடியாது, எனவே சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி இல்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கேரள அரசு: சபரிமலை கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை”

அதிகம் படித்தது