மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொடுக்க மறந்தது!! (சிறுகதை)

ஸ்ரீதரன்

Nov 11, 2017

Siragu kodukka marandhadhu1

ரம்யா கை ஒடிந்த மாதிரி இருந்தது. இருக்காதா பின்னே? வாட்ஸ் அப் பார்க்க முடியாம மொபைல் போனில் உள்ள சிம்மை தன்னுடன் கூட பணிப் புரியும் நந்தினிக்கு இரவல் கொடுத்து விட்டு இவள் அல்லவா திண்டாடுகிறாள். ”எல்லாம் பாஸ் வெங்கட்டால் வந்தது. அவர் ஆபிஸ் கணக்கில்  ஒரு சிம் கார்டை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே. அவர் நாசாமா போக” மனத்துக்குள் சபித்தாள்.

இரண்டு நாள் முன்னால் மாலை நாலு மணி இருக்கும். ஆடிட்டர்  வெங்கட் ரம்யாவைக் கூப்பிட்டுச் சொன்னார்.

”ரம்யா உங்கிட்டே இருக்கிற சிம்மை நந்தினிக்குக் கொடு. அவள் இரவு சென்னை போகிறாள், இண்டெர்நெட்டில் ஏதாவது பார்க்க வேண்டியிருக்கும்“.

”நான் ஃபேஸ் புக் பார்க்கணும், வாட்ஸ் அப் பார்க்கணும். எனக்கு வேண்டியிருக்குமே சார்.” மொபைல் சிம் கொடுப்பதைத் தவிர்க்கப் பார்த்தாள்.

வெங்கட்டா விடுவார். ”சின்னக்குழந்தை மாதிரி ஃபேஸ் புக், வாட்ஸ் அப் பார்க்க வேண்டுமின்னு சொல்றே. அதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அவகிட்டே சிம்மை எடுத்து முதல்லே கொடு”.  ரம்யாவின் முகத்தை வெங்கட் பார்க்கவில்லை. பார்த்தால் அரண்டு போயிருப்பார். எள்ளும் கொள்ளும் வெடிக்கும். அவ்வளவு சூடாயிருந்தது. வெங்கட் ரம்யாவை பால் குடிக்கிற சின்ன பாப்பா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.அவள் பெரிய பாப்பா என்பதும் அவளுடன் இன்னொரு முகம் அவருக்குத் தெரியாது.

அவள் இரவில் பத்து மணி ஆனதும் பெங்களூரில் இருக்கும் தன் அத்தைப் பையனுடன் வாட்ஸ் அப்பில் வெகு நேரம் சாட்டிங் பண்ணுவாள். கல்லூரியில் படித்த ஆண் நண்பர்களும் உண்டு. அவர்களிடமிருந்து ஏதாவது மெசேஜ் வந்து கொண்டிருக்கும். வாட்ஸ் அப்பில் ஒரு செளகரியம். எல்லா மெசேஜையும் ரிசிவ் பண்ணலாம். பதில் போட வேண்டியதிலை. இவள் பதில் போடமாட்டாள். புளு டிக்கைப் பார்த்து படித்து விட்டள் என்று தெரிந்துகொள்ளலாம். இவள் பிடிக்காத மெசேஜை படிக்காமல் டெலிட் செய்து விடுவாள். எப்படியோ வாட்ஸ் அப் போதையில் அவள் விழுந்து விட்டாள். அதிலிருந்து வெளிவருவது மிகவும் கடினம்தான்.

பாஸ் சொல்லும்போது முடியாதென்று சொல்லமுடியுமா? வேறு வழியில்லாமல் தன்னுடைய சிம்மை எடுத்து நந்தினியிடம் கொடுத்தாள்.

அவள் வேலை செய்யும் ஆடிட்டர் ஆபிஸ்  ஈரோடில் இருக்கிறது. ஆடிட் சம்பந்தமாய் நந்தினி சென்னை போக வேண்டியிருந்தது. நந்தினி எப்போது திரும்பி வருவாள் என்று திட்டவட்டமாகத் தெரியாது. இரண்டு மூன்று நாட்கள் ஆகலாமென்று பாஸ் சொன்னார். நந்தினி வேலையை முடிச்சிட்டு உடனே ஓடு வந்துடுவேன். சிம் கொடுத்த்திற்கு ரொம்ப தேங்ஸ் என்றுபுன்முறுவள் பூத்தாள்.

அப்போது இரவு மணி ஒன்பது. ரம்யா தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவள் அம்மா, ஏண்டி ரம்யா, தலைவலிக்கிறதா? இந்தா இந்த மாத்திதையைப் போட்டுண்டு வெந்நீரைக் குடி என்று விசயம் புரியாமல் மாத்திரையை ரம்யாவிடம் நீட்டினாள்.

ரம்யாவுக்கு வந்ததே  கோபம். மாத்திரை வாங்கி வீசி எறிந்தாள். “போம்மா என்னை நிம்மதியா இருக்க விடு. இந்தப் பாழா போன மொபைலை வைச்சுண்டு நான் என்ன பண்ணறது. வாட்ஸ் அப் பார்க்க முடியல. இதை நெருப்பிலே போடு“ என்று கத்தினாள்.

அவள் காதலனும் அத்தை பையனுமான  ராஜேஷ் கூட வாட்ஸ் அப் சாட்டிங் பண்ண முடியவில்லையே என்னும் வருத்தம் அவளுக்கு. அவள் என்ன செய்வாள். அம்மாவிடம் வெளிப்படையாகவும் சொல்ல முடியாது. ஏன் ராஜேஷ் கிட்ட கூட தன் காதலைச் சொல்லாமல் அவள் டபாய்த்து வருகிறாள், அவன் அவளிடம் என்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டதற்கு சொல்ல மாட்டேன் என்று பதில் கொடுத்தாள். ராஜேஷ் அதனால் தன் காதலை இவளிட ப்ரோபோஸ் செய்யாமல் இருக்கிறான். மற்றபடி தினந்தோறும் இருவருக்கும் வாட்ஸ் அப் சாடிங் நடக்கும். ஆபிஸில் என்ன நடந்தது என்று இவள் சொல்லுவாள். அவன் ஆபிஸில் என்ன நடந்தது என்று சொல்லுவான். சினிமாவைப் பற்றி பேச்சு இருக்கும்.

ராஜேஷ் நிலைமை என்ன என்று பார்ப்போம். பத்து மணி ஆனதும் அவன் ரம்யாவிடமிருந்து வாட்ஸ் அப் மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் வரவில்லை. எதிர்பார்த்து எதிர்பார்த்து ஒரு மணி வரை முழித்திருந்து பிறகுதான் தூங்கினான்.

அடுத்த நாளும் ஆவலுடன் பார்த்துவிட்டு மெசேஜ் எதுவும் வராததால் அவனால் பொறுக்க முடியவில்லை. ரம்யாவுக்கு ஏதோ ஆகிவிட்டது. அல்லது அவள் மொபைலுக்கு பிரச்சனை வந்து விட்டது  போல இருக்கிறது. என்னைப் பிடிச்சுருக்கு என்று சொல்ல வில்லையே தவிர அவள் நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் கண்டிப்பாக என்னிக்காவது ஒரு நாள் தன் காதலை அவள் என்னிடம் சொல்லுவாள் என்று நினைத்தான். அவசியம் அவளைப் போய் பார்க்க வேண்டும் என்று காலையிலே ஷடாப்தியில்  ஈரோடுக்கு டிக்கட் வாங்கி ஏறி அமர்ந்தான். ராஜேஷ் எப்போதும் மொபைலைக் கையிலே வைத்திருப்பான். அவனும் ஒரு வாட்ஸ் அப் பைத்தியம். காலையில் எழுந்தவுடன் வாட்ஸ் அப் . இரவில் படுக்க போகுமுன் வாட்ஸ் அப் என்பது அவன் கற்ற  அரிச்சுவடி.

ராஜேஷ் போய் சேர்வதற்குள் ரம்யாவுக்கு சிம் கிடைத்து விட்டது. சந்தோஷத்தில் லஞ்ச் டைம்க்கு அரை மணி முன்னாலே கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள். ராஜேஷை  வீட்டில் பார்த்த்தும் அவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

ராஜேஷ் என்ன திடீரென்று சொல்லாமே வந்துட்டே. ஏதாவது விசேசம் உண்டா?

உன்கிட்டேயிருந்து சாட்டிங் பண்ணமுடியலையா. என்னமோ ஏதோன்னு நினைச்சு அலறி அடிச்சுண்டு ஓடி வரேன். என்ன ஆச்சு உன் மொபைலுக்கு? ஏன் மெளனமாய் இருக்கே இரண்டு நாளா? யு ஆர் ஒகே.

அவனுடைய குரலில் தோன்றிய அதீத அக்கறையை ரம்யா கவனித்தாள். ஆனால் அதை கவனித்தது போல் காட்டிக் கொள்ளவில்லை.

என்னுடை ஆபிசில் வேலை செய்யும் நந்தினி என்னுடைய சிம்மை வாங்கிக் கொண்டு சென்னை போய்விட்டாள். இன்று காலைதான் திருப்பிக் கொடுத்தாள். சிறிது நேரம் பேசி விட்டு ராஜேஷ் கிளம்பி விட்டான். கிளம்பும்போது அவன் ரம்யாவைக் கட்டி அணைத்தான். எப்படி அவன் தன் கையில் இருந்த மொபைலில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டே. ரம்யாவும் அவள் கையில் உள்ள மொபைலில் வாட்ஸ் அப் பார்த்துக் கொண்டே. நல்ல வாட்ஸ் அப் பைத்தியங்கள்!!

ரயிலில் போகும்போதுதான் ராஜேஷ்க்கு ஒரு விசயம் மண்டையில் உறைத்தது. கொடுக்க மறந்த முத்தம் ஞாபகம் வந்தது. ”அடடா ! ரம்யாவைக் கட்டிப் பிடித்துக்கொண்ட போது முத்தம் கொடுக்காமல் வந்து விட்டோமே. ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமே. சரியான முட்டாள் நான்“ என்று வருந்தினான். சட்டென்று அவன் முகம் பிரகாசம் ஆனது. வாட்ஸ் அப்பில் முத்தம் கொடுக்கிற மாதிரி உள்ள சிம்பலை ரம்யாவுக்கு அனுப்பினான்.

அவன் ரயில்வே ஸ்டேசன் போனதும் ரம்யாவும் ராஜேஷ் கட்டிப் பிடித்த போதும் முத்தம் கொடுக்காமல் இருந்து விட்டான். எவ்வளவு கண்ணியமான ஆண்மகன் என்று வியந்தாள். தன் சம்மதத்தைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது ராஜேஷிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.

”பிடிச்சுருக்கு” பதில் மெசேஞ் சிவப்பு நிற இதயம் சிம்பலுடன் அனுப்பினாள்.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொடுக்க மறந்தது!! (சிறுகதை)”

அதிகம் படித்தது