மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொவிட்-19 (கவிதை)

ராஜ் குணநாயகம்

Mar 28, 2020

siragu coronavirus6

 

 

உள்ள கடவுளை

இல்லை என்கிறதா?

கடவுள் இல்லை

என்பதை மெய்பிக்கின்றதா?

நுண்ணுயிர் கொண்டு

மனிதரை கொன்றிடும்

நவீன விஞ்ஞான

சோதனைகளின் தொடர்ச்சியா?

இல்லை

கலியுக

சோதனைகளின் தொடர்ச்சியா?

ஆக்கமும்

அழிவும்

உலகமே சீனாவின் பிடியிலோ?

ஓ கொவிட்-19!

உன்னிடம் மனிதர்கள்

நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும்..

ஒருவேளை உனக்காய்

கோவில் கூட கட்ட வேண்டும்..

 

நீ மனிதர்களை

சமத்துவமாய் நடத்தத்தெரிந்து வைத்திருக்கிறாய்..

உனக்கு

வெள்ளை,கறுப்பு தெரியவில்லை

சாதி,மதம் தெரியவில்லை

எதுவித வேற்றுமையும் தெரியவில்லை

மனிதர்கள் மனிதர்களாகவே மட்டுமே தெரிகிறது..

இதுவும் மறந்துபோகும்

இதுவும் கடந்துபோகும்

சுடலை ஞானம்போல..

கொவிட்-19!

 


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொவிட்-19 (கவிதை)”

அதிகம் படித்தது