மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி



Mar 16, 2017

கோவா மாநில சட்டசபை தேர்தலின் முடிவு சென்ற சனிக்கிழமை வெளியானது. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Siragu manohar_parrikar

கோவாவில் ஆட்சி அமைக்க 22 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க, உதிரி கட்சிகளின் ஆதரவை பெற்று அதற்கான ஆதரவு கடிதத்தை ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் அளித்தது.

இதையடுத்து பாஜக-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. பாஜக சார்பில் மனோகர் பாரிக்கர் பதவியேற்க இருந்த நிலையில் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கின் விசாரணையில் பாஜக பதவியேற்க தடையில்லை என்றும், சட்டசபையில் மார்ச் 16ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே சென்ற செவ்வாய்கிழமை மனோகர் பாரிக்கர் பதவியேற்றார்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி இன்று(மார்ச் 16) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மனோகர் பாரிக்கருக்கு 22எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளித்ததினால் வெற்றிபெற்றார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி”

அதிகம் படித்தது