மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சசிகலாவிற்கு ஆதரவாக 119 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்



Feb 13, 2017

அதிமுக-வின் 119 எம்.எல்.ஏ-க்கள் சசிகலாவிற்கு ஆதரவாக உள்ளார்கள் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இத்துடன் சசிகலாவிற்கு ஆதரவு அளிக்கும் 119 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்அரசு தரப்பு வழக்கறிஞர்.

Siragu admk-mla

119 எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசொர்ட்டில் தங்கியிருப்பதாகவும், தேவைப்படுமாயின் அந்த எம்.எல்.ஏ-க்களை நேரில் ஆஜர்படுத்த இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏ-க்களின் அணிவகுப்பை நடத்த முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் 117 எம்.எல்.ஏ-க்கள் தேவை என்கிற பட்சத்தில் சசிகலாவிடம் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அதிகமாக உள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலாவிற்கு ஆதரவாக 119 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்”

அதிகம் படித்தது