மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சசிகலா: அதிமுக கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நீக்கம்



Feb 14, 2017

நேற்று கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏ-க்களுடன் தங்கியிருந்தார் சசிகலா. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட மூன்று பேருக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Siragu sasikala5

தீர்ப்பு வழங்கியதை அடுத்து, சசிகலா தங்கியுள்ள எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட இவரின் ஆதரவாளர்களையும் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் சசிகலா.

பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், கே.பி.விஸ்வநாதன், பி.எச்.பாண்டியன், மோகன் ஜேசிடி பிரபாகர், ஜெயபால், முனுசாமி, மனோஜ் பாண்டியன், செல்வம், தவசி, எஸ்.கே.செல்வம், ராஜேந்திர பிரசாத், பரிதி இளம்வழுதி, முத்துராமலிங்கம், முத்துசெல்வி உட்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களையும் அதிமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் சசிகலா. இதில் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக இருந்த முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலா: அதிமுக கட்சியிலிருந்து ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நீக்கம்”

அதிகம் படித்தது