மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார்



Dec 31, 2016

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றுக்கொண்டார். அதன் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் அவர்களை முன்னிறுத்தினர் அதிமுக நிர்வாகிகள்.

siragu-sasikala

இதையடுத்து சென்ற டிசம்பர் 29ம் தேதி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று(30.12.2016) எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா.

சசிகலா இன்று(31.12.2016)போயஸ் கார்டனிலிருந்து ஜெயலலிதா வழக்கம் போல் வரும் காரில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்திற்கு வந்தார். பின் அதிமுக பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்து பொதுச்செயலாளர் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றபிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் முதல் உரையாற்றிய சசிகலா, தன்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார்”

அதிகம் படித்தது