மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது கூவத்தூர் காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் வழக்கு



Feb 15, 2017

மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் கூவத்தூர் காவல் நிலையத்தில் சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் புகார் அளித்துள்ளார்.
Siragu-sasikala-and-palanisami

கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ-க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் புகார் அளித்த பிறகு ஆள்கடத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சசிகலா முன்னிலையில் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது கூவத்தூர் காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் வழக்கு”

அதிகம் படித்தது