மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சசிகலா தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் 131 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர்



Feb 8, 2017

தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று (08.02.2017)சசிகலா தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.

Siragu ADMK MLA-meeting

இக்கூட்டத்திற்கு 131எம்.எல்.ஏ-க்கள் வருகை தந்திருந்தனர் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எந்த சக்தியாலும் அதிமுக-வை உடைக்க முடியாது, அதிமுக ஒற்றுமையாக உள்ளது, துரோக செயல்களுக்கு அதிமுக-வினர் துணை போக மாட்டார்கள் என்று சசிகலா அக்கூட்டத்தில் பேசினார்.

பன்னீர்செல்வம் திமுக-வுடன் ஐக்கியமாகிவிட்டது தெளிவாக தெரிகிறது, துரோகங்கள் ஒருபோதும் வென்றது இல்லை, அம்மாவின் குறிக்கோள்களுக்கு எதிராக செயல்படுகிறார். நானும், அதிமுக-வும் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டோம் என்று சசிகலா பேசியுள்ளார்.

இக்கூட்டம் முடிந்த பிறகு எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேருந்துகளில் நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்பு அங்கிருந்து ஜனாதிபதியை சந்திக்க டெல்லிக்கு அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலா தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் 131 எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர்”

அதிகம் படித்தது