மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சட்டையைக் கிழித்துக்கொண்டு சாலையில் ஓடுவது போன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம்



Apr 19, 2017

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 37 நாட்களாக பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக விவசாயிகள். அவ்வகையில் எலிக்கறி தின்றும், பாம்புக்கறி தின்றும், மண்சோறு சாப்பிடுதல், கைகளில் எலும்புக்கூடு ஏந்துதல் என்று பல்வேறு வடிவங்களில் போராடி வருகிறார்கள்.

அவ்வகையில் 37 வது நாளான இன்று(19.04.17) மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தில் விவசாயிகள் தங்கள் சட்டைகளை கிழித்துக் கொண்டு சாலையில் ஓடுவது போன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்டையைக் கிழித்துக்கொண்டு சாலையில் ஓடுவது போன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம்”

அதிகம் படித்தது