மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.07 உயர்வு



Dec 1, 2016

ஒரு வருடத்திற்கு 12 என்று 14.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் வீட்டு உபயோகத்திற்கென்று மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. 12 சிலிண்டருக்கான மானியம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

siragu-gas

12 சிலிண்டருக்கு மேல் வாங்குபவர்கள் சந்தை விலைக்கு வாங்க வேண்டும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை போன்றவற்றிற்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கிறது.

இதனால் ரூ.538.50 என்று இருந்த 14.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 2.07 உயர்த்தப்பட்டதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.540.57 என்று உள்ளது.

இதற்கு முன்னதாக டீசல் விலை 12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலின் விலை 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்குக்கு வந்தது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.07 உயர்வு”

அதிகம் படித்தது