மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சரணடைய கால அவகாசம் கோரிய சசிகலா: உச்சநீதிமன்றம் மறுப்பு



Feb 15, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து நேற்று(14.02.17) தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். இதையடுத்துபெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது.

Siragu sasikala

இன்று(15.02.17)சசிகலா தரப்பு வக்கீல் துளசி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, உடல்நிலை காரணமாக சசிகலா சரணடைய நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

சசிகலா விடுத்த கோரிக்கையை நிராகரித்து இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. பெங்களூர் நீதிமன்றத்திற்கு சசிகலா வந்தவுடன் நீதிமன்ற காவலில் இருந்து போலிஸ் காவலுக்கு ஒப்படைக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சரணடைய கால அவகாசம் கோரிய சசிகலா: உச்சநீதிமன்றம் மறுப்பு”

அதிகம் படித்தது