மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சர்வதேச நீதிமன்றம்: குல்பூஷன்சிங் ஜாதவ்வின் தூக்கு நிறுத்தி வைப்பு



May 18, 2017

குல்பூஷன் சிங் ஜாதவ் என்பவர் இந்திய கடற்படையின் அதிகாரியாக இருந்தவர். மார்ச் மாதம் 3ம் தேதி பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டியதாகவும், சட்டவிரோதமாக ஊடுருவியதாகவும் பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் குல்பூஷன்சிங்கை கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம்.

Siragu kulbhushan

கடந்த மாதம் 10ம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷனுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை இந்தியா கடுமையாக கண்டித்தது. மேலும் குல்பூஷன்சிங்கை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்க மறுத்தது பாகிஸ்தான்.

இந்நிலையில் நெதர்லாந்தில் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷனின் மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

பதினோரு நீதிபதிகள் கொண்ட குழுவினர் இவ்வழக்கின் விசாரணையை நடத்தினர். அதில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை குல்பூஷன்சிங் ஜாதவ்-வின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சர்வதேச நீதிமன்றம்: குல்பூஷன்சிங் ஜாதவ்வின் தூக்கு நிறுத்தி வைப்பு”

அதிகம் படித்தது