மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

“சா”ப்பறை (கவிதை)

இல. பிரகாசம்

May 27, 2017

Siragu parai1

 

“சா”ப்பறை

ஆதிநாதம் கனத்து ஓலிக்கிறது!

வீதியெங்கும்

ஊர்வலத்தில் அவன் கலைஞன்.

அந்தம் நாடிச் செல்லும் ஊர்வலம்

கொட்டுகிறான் ஆதிநாதத்தை “தம் தம் தம்தம்”

 

ஆதிக் குடியெனும் பெயரில்லை

சாதிக் குடியான் வைத்தான் ஒரு பெயரை

பாறையில் கண்ட தோலைத் தட்ட

“தம்தம் தம் தம்”மென இசைத்தான்

பாறை தந்த இசைக் கருவியை

“பறை”யென் றாக்கிகக் குடி நடத்தினான்

“பறையன்”என்றானான்

 

பள்ளம் தோன்ற ஓடும் நீரைக் கொண்டு

பள்ளமான நிலத்தில் -பாமரன் என்றாகி

பள்ளமான நிலத்தில் உழவு செய்தான்

“பள்ளன்”என்றானான்

 

உச்சிக் குடுமி வேள்வி செய்த

மனுவால் இழிச் சாதியானான்

“பள்ளன்”“பறையனெ”னும் கீழ்ச்சாதியென ஆனான்

மனுசொன்ன நீதியால்

மானமிழந்து நாவிழந்து நாதியற்றுப் போனான்

 

கொட்டுகிறான்-

“தம் தம் தம்தம்”

குலமென்ன கோத்திரமென்ன

உச்சிக் குடுமி செய்த பேதமென்ன

வர்ணமென்றே மனித குலத்தோரை

பாகுபாடு செய்ததென்ன?

“தம்தம் தம் தம்”

 

மனுவென்னுஞ் சாத்திர மோதிக்

கீழ்ச்சாதி மேல்சாதியென பகுத்ததென்ன?

நாதியின்றி வாழ்ந்தோர் எங்கள் வாழ்வு -இனி

நீதிப் பெறவே கொட்டுகிறோம்

“தம்தம் தம் தம்”

 

சாதியில்லை பேதமில்லை

நாலு வருண பேதமுமில்லை

நஞ்சு விதைத்த

மனுசொன்ன கொடுஞ் சு10த்திரமில்லை

ஆதிநாதப் பறையே எவனுக்கும் இறுதியென

“தம் தம் தம் தம்தம்”மென

சாதிக்கொரு “சாப்பறை”கொட்டிப் போகிறான்

 


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““சா”ப்பறை (கவிதை)”

அதிகம் படித்தது