மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சித்தூர் தீர்ப்பு

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 2, 2017

Sirgu siddur decison1

வேலூருக்கு அருகில் வேட்டவலம் ஊருக்கு அருகாமையில் சதுப்பேரி என்ற கிராமத்தில் விஸ்வகர்ம சாதியச் சார்ந்த மார்க்கசகாய வாத்தியார் என்பவர் வடமொழி வேத, சாத்திர, சம்பிரதாயங்களில் வல்லவர். இவர் தெலுங்கு ஆசாரி ஆவார். இவர் தன் இன குடும்பங்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதராக செயல்பட்டுவந்தார். அப்படி அவர் ஒரு திருமணத்தை நடத்தியபோது, அந்த கிராமத்தைச் சார்ந்த பஞ்சாங்க குண்டையன் என்பவர் தன்னுடன் சில ஆட்களை திரட்டிக்கொண்டுவந்து கலகம் செய்தார். அதாவது பிரமணர் அல்லாதவர் திருமணம் செய்து வைக்க சாத்திரத்தில் இடமில்லை, எனவே மார்க்கசகாய வாத்தியார் செய்து வைத்ததிருமணம் செல்லாது என்றார். பின்னர் அவ்வூரின் பஞ்சாயத்தார்கள் கூடி இவ்விருவர்களுடைய வாத, பிரதிவாதங்களைக் கேட்டு, விஸ்வகர்ம மார்க்கசகாய வாத்தியார் செய்த திருமணம் செல்லும் என தீர்ப்பளித்தது.

ஆனால்அதை ஏற்றுக்கொள்ளாத பஞ்சாங்க குண்டையன் சித்தூர் அதலத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதை மார்க்கசகாய வாத்தியார் எதிர்கொண்டு தனது வாதத்தைவேத சாத்திர சான்றுகளுடன் முன்வைத்து வாதாடினார். இதை சித்தூர் அதலத் நீதிமன்றம் சதுர்வேதிகளைக் கலந்து ஆலோசித்து இறுதியாக மார்க்கசகாய வாத்தியார் செய்து வைத்த திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இதுசித்தூர் தீர்ப்பு என்று 1818, டிசம்பர் 15 இல், வெளிவந்தது. ஆக, ஆங்கிலேயர் காலத்திலேயே பிரமணர்கள் தங்களைத் தவிர வேறு எந்தச் சாதியினரும் திருமணம் செய்து வைக்க உரிமை இல்லை என்று கூறிய வாதம் தோற்கடிக்கப்பட்டது.

ஆதாரம்: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக தடையாக இருப்பது ஆகமமா? வருணாசிரமமா?

ஆசிரியர்: முனைவர் வெ. சிவப்பிரகாசம்


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்தூர் தீர்ப்பு”

அதிகம் படித்தது