மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிந்தனைமுத்து (கவிதை)

முனைவர்.கு.பாக்கியம்

Dec 30, 2017

siragu iru paadhaigalum4

 

இதயத்தை வலுப்படுத்த
சிங்கோனா மரப்பட்டையின்
கொய்னா……
ஆம். என்றோ படித்தது
சரியோ…..தவறோ…..
இன்று விழுந்தது
மனத் திரையில்
பிம்பமாய்…..

வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு
இது அவசியம்.
அனாவிசயம் அல்ல.
வேலைதேடி எடுத்து
நடத்தும் படையெடுப்பில்
பெற்றபட்டம் சிறப்பாயினும்
முனை மழுக்கப்பட்டு
சிறிதாகமதிக்கப்படும் போது
தன்னால் அழைத்துவரப்பட்ட
படைவீரர்களின்
பணவலிமையைப் பெரிதாக
மதிக்கப்படும் போது…..
நாளைய தினம்
நம்கையில் இல்லை….
நம்பிக்கையில்….
ஐயா!

பட்டம் பெற்றது குற்றமா!
குற்றவாளிக் கூண்டிலே
நிறுத்தப்படுபவனை
நிரபராதியாக்க
கொண்டுவரப்படும்
பொய்யைமெய்யாக்கி
மெய்யைப் பொய்யாக்கும்
சாட்சியங்களையல்லவா
என்னிடம் எதிர்பார்க்கின்றீர்….

அசையும் காகிதத்தில்
அசையாஎழுத்துக்களில்
பொறித்துத் தந்த
பட்டத்தின் சிறப்பு இதுதானா?
பட்டத்தைப் பத்திரப்படுத்தி
‘பாலித்தீன்’ உறையில்
இட்டுவைப்போம் பத்திரமாய்.

அதையேன் அழுக்குத்
தோயும் வண்ணம்
அங்குமிங்கும்
தூக்கி அலைவானேன்….
சீறிப் பாய்வதில் பயனில்லை
இட்டகுறிதப்பாமல் இருக்க
இன்று பதுங்குவோம்
புலியாய்……..

வெற்றிகிடைக்கும் வரை
இரத்தத்தின் இறுதிசொட்டு
தீர்ந்தாலும்…ஓடுவோம்
ஓடிக்கொண்டே
இட்ட இலக்கைத்
தப்பாமல் தட்டுவோம்
இன்றுசாண் ஏற
முழம் சறுக்கினாலும்
நாளையதினம்
நம் கையில்….  நம்பிக்கையில்….
ஆம் நம்பிக்கையில்!!


முனைவர்.கு.பாக்கியம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிந்தனைமுத்து (கவிதை)”

அதிகம் படித்தது