மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் நீட்டிப்பு



Nov 7, 2016

சென்னை உயர்நீதிமன்ற அறையில் சில வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் விசாரணைக்கு வந்தது. மத்திய தொழிலக பாதுகாப்புப்படை வீரர்கள் (சி.ஐ.எஸ்.எப்) 2015 நவம்பர் முதல் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் இப்பாதுகாப்பு வழங்கப்பட்டது.

siragu-chennai-highcourt

இந்தப் பாதுகாப்புப் பணியில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர். இப்பாதுகாப்பு நவம்பர் 15 ல் முடிவடையும் நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இப்பாதுகாப்பு 2017 நவம்பர் வரை நீடித்து உத்தரவிட்டார் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல். மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு நீடிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் நீட்டிப்பு”

அதிகம் படித்தது