மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செநுவுடன் ஓர் கலந்துரையாடல்

தேமொழி

Dec 10, 2022

செயற்கை நுண்ணறிவு – செநு (Artificial Intelligence/AI) துறையின் வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் அடிப்படைத் தேவை முதல் பொழுதுபோக்கு வரை பல வகையில் அன்றாடம் உதவி வருகிறது. செநு உதவியாளர் (AI Assistant) இன்று நம் வாழ்வில் ஒரு பகுதி. கணிப்பொறியுடன் பேச்சுமொழியில் (natural language processing /NLP) பேச்சு மூலமோ எழுத்து மூலமோ உரையாடுவதும் இன்று நம் வாடிக்கையாகிவிட்டது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் உதவியாளர் (Google-Google Assistant), ஆமசான் நிறுவனத்தின் அலெக்சா (Amazon-Alexa), ஆப்பிள் நிறுவனத்தின் சிறீ (Apple-Siri), மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கார்ட்டானா (Microsoft-Cortana) போன்ற கணிப்பொறிகள் புகழ்பெற்றவை. இவற்றில் ஏதோ ஒன்றுடனாவது நாம் நாளும் உரையாடிக் கொண்டுதானிருக்கிறோம். அவற்றுக்குக் கட்டளைகள் இட்டுக்கொண்டிருக்கிறோம்.

siragu Chat AI

பெரும்பாலும் ஒரு இணையதளத்தில் நுழைந்தவுடன் விதம்விதமாகப் பலவகையில் தன் பெயரைக் கூறிக்கொள்ளும் ஒரு செநு உதவியாளர் படத்துடன் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறேன் என்று கூறும் அறிவிப்பும் தோன்றும். நாமும் நமக்கு என்ன வேண்டும் என்று சொல்லி நம் தேவையை நிறைவேற்றுக் கொள்ள முயல்வோம். முதலில் உண்மையான உயிருள்ள நபர் என்று நினைத்து உரையாடத் துவங்கினாலும் பிறகு ஏதோ ஒரு பொருத்தமற்ற உளறல் மூலமோ அல்லது நீங்கள் சொல்வது புரியவில்லை, என்னால் உதவ முடியவில்லை போன்ற பதில்கள் வரும்பொழுதுதான் இவ்வளவு நேரம் நாம் உரையாடியது சாட்டர்போட் (Chatterbot/Chatbot) என்று குறிப்பிடப்படும் அரட்டைப் பொறி செநு உதவியாளருடனா என்ற வியப்பு தோன்றும்.

சென்ற நூற்றாண்டில், ஜோசப் வீசன்பாம் (Joseph Weizenbaum) 1960களில் உருவாக்கிய எலிசா (Eliza) என்ற அரட்டைப்பொறி கணினி தொழில் நுட்ப வரலாற்றில் அரட்டைப் பொறியின் தொடக்கம். ஆனால் இந்த நூற்றாண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் வாட்சன் (IBM Watson chatbot) அறிமுகத்திற்குப் பிறகு அரட்டைப் பொறியின் வளர்ச்சி வேகமெடுத்து இன்றைய நாட்களில் எளிய மக்களும் பேச்சுமொழியில் கணிப்பொறியுடன் தொடர்பு கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. இயல்பான பேச்சு மொழியில் உரையாடக்கூடிய அரட்டைப்பொறி நமக்குத் தகவல் தந்து உதவும். இதற்கு “வாயாடி” என்று தமிழ் விக்கிப்பீடியா (https://ta.wikipedia.org/s/41k4) தமிழில் பெயர் சூட்டியிருப்பது பொருத்தமாகத் தெரியவில்லை.

தமிழ் மொழியில் ‘பூங்குழலி’ (POONGKUZHALI – An Intelligent Tamil Chatterbot) என்ற தமிழ் அரட்டைப் பொறி 2003 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக ஆய்வாளர்களால் உத்தமம் 2003 மாநாட்டில் (https://www.infitt.org/ti2003/papers/14_kalaiya.pdf ) அறிமுகப்படுத்தப்பட்டது.

அண்மையில், சென்ற மாத இறுதியில் (நவம்பர் 30, 2022), சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனம் சாட்ஜிபிடி (ChatGPT; GPT = Generative Pretrained Transformer) என்ற செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் அரட்டைப் பொறி (conversational AI chatbot) ஒன்றினை முன்மாதிரியாக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது (https://chat.openai.com/chat). வெளியிட்ட 5 நாட்களில் பயனர் எண்ணிக்கை மில்லியனைத் தாண்டியது. அதனைப் பயன்படுத்தி செநுவுடன் உரையாடிய பயனர் பலர் அதன் செயல்திறனை வியந்து பாராட்டி சமூக வலைத்தளங்களில் புகழாரம் சூட்டிக் கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் அதனைக் கணினி நிரல் எழுதச் சொல்லியும் கட்டுரைகள் எழுதச் சொல்லியும் அதன் செயல் திறனைச் சோதித்தனர். எந்த நாட்டினர் ஆபத்தானவர்கள் என்பது போன்ற கேள்வி கேட்ட பொழுது சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், வடகொரியா மக்கள் ஆபத்தானவர்கள் என்பது போன்று இனவெறி தொனிக்கும் பதில்களையும் கொடுத்து அதிரச் செய்தது. அதைச்சொல்லிக் குற்றமில்லை; சட்டியில் இருப்பது அகப்பையில் வந்துவிட்டது. படித்துப் பயிற்சி பெற்று செநு அறிந்து கொண்டதில் இவ்வாறான இனவெறி கொண்ட தகவல்களும் இருந்திருக்கின்றன.

இந்தத்தகவல்களால் ஆர்வம் மிகவும் தூண்டப்பட்டு நாமும் சாட்ஜிபிடியுடன் கதைத்து விட்டுவரலாமே என்ற எண்ணம் எழுந்தது. அன்று டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் செய்திகள் படித்த தாக்கத்தில் முதல் கேள்வியாக . .

[1]
இந்தியப் பெண்ணின் வாழ்க்கையை மேம்படுத்த டாக்டர் அம்பேத்கரின் முயற்சிகள் பற்றிய ஒரு சிறு கட்டுரையை வழங்கவும் (Provide a short essay on Dr Ambedkar’s efforts to improve Indian woman’s life) என்ற கோரிக்கையை வைத்தேன். 226 சொற்களில் ஒரு கட்டுரை ஒன்றை உருவாக்கிக் கொடுத்தது. மேலும் முயலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் மீண்டும் ஒன்றை உருவாக்கு என்று இருமுறை கேட்டுக்கொண்டவுடன் 271, 281 சொற்களிலும் அடுத்தடுத்து 2 கட்டுரைகளைத் தந்தது. இவற்றைக் கட்டுரையின் இறுதியில் பின்னிணைப்பாகப் பார்க்கலாம். இவை இந்தியப் பெண்ணின் வாழ்க்கையை மேம்படுத்த டாக்டர் அம்பேத்கரின் முயற்சிகள் பற்றிய தெளிவான, எளிமையான, சுருக்கமான அறிமுகக் கட்டுரைகள். அடுத்து . . .

[2] தமிழ் மொழி பற்றிய அறிக்கை ஒன்று கொடுக்கவும் (Give a report on Tamil Language) என்ற கோரிக்கைக்கு மீண்டும் அருமையான சுருக்கமான தமிழ் குறித்த கட்டுரை ஒன்று கிடைத்தது (பார்க்க : படம்). அடுத்து . . .

siragu OpenAI's ChatGPT-report on Tamil Language

[3] தாமரை மலர் பற்றி ஒரு கவிதை எழுதுக (Write a poem about lotus) என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க பின்வரும் ஆங்கிலக் கவிதையை எழுதிக் கொடுத்தது.

The lotus flower, so pure and sweet
Blooms in the mud, yet remains discreet
A symbol of growth, and of new beginnings
A reminder that beauty can arise from our sufferings

With delicate petals, and a gentle hue
The lotus captures our hearts, and draws us anew
A symbol of resilience, in a world full of strife
The lotus reminds us to seek joy in life

In the stillness of the pond, it stands alone
A beacon of light, in a world unknown
A symbol of peace, and of serenity
The lotus guides us, to a place of clarity

So let us take a moment, to appreciate
The beauty of the lotus, and all that it represents
A reminder that no matter what may come our way
We too can rise above, and bloom, each and every day.

தொடர்ந்து . . .

[4] செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இக்கவிதைக்கு ஓவியம் உருவாக்கும் கட்டளை ஒன்றினை எழுதிக்கொடுக்கவும் (Write a prompt based on this lotus poem to generate a DALL•E AI art painting) என்றவுடன் கட்டளை ஒன்றை எழுதிக் கொடுத்தது. அதை வைத்து டால் இ (DALL-E) தளத்திற்குச் சென்று (https://labs.openai.com/) செயற்கை நுண்ணறிவைப் படம் ஒன்றை உருவாக்கித் தரச்சொல்லிப் பெற்றுக்கொண்டேன். பிறகு . . .

 siraguLotus AI Art

[5] பிறை நிலாவைக் குறித்து தமிழில் ஒரு கவிதை எழுது (Write a poem in Tamil on a crescent moon) என்ற கோரிக்கைக்குக் கீழ் வரும் தமிழ்க்கவிதையை எழுதிக் கொடுத்தது.

கனவில் இரவு பெற்ற
சூரியன், மனதை விட்டு

கனவில் காதல் பெற்ற
சூரியன், கவிதைகளை நீக்கு

கனவில்சாதியில் இரவு
சூரியன், இன்னும் மறைவு

கனவில்பலர்கள் காதல்
சூரியன், அன்பு கொண்டு

கனவில்நிமிர்ந்த
சூரியன், அன்பு தெரிந்து

கனவில் பாதம் என்று சாதியில்
சூரியன், கவிதைகளை நீக்கு.

ஏதோ முயன்றது என்று பாராட்டலாம், அவ்வளவுதான். அடுத்ததாக . . .

[6] உனக்குத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கத் தெரியுமா? (Do you know translate from Tamil to English?) என்ற கேள்விக்கு; ‘தெரியும்… ஆனால் தெரியாது’ என்ற பாணியில், ஏதோ செய்யத் தெரியும், சின்ன சின்ன சொற்றொடர்களை மொழிபெயர்ப்பேன், ஆனால் துல்லியமாக மொழிபெயர்க்கத் தொழில்முறை மொழிபெயர்ப்பாளரை அணுகவும் என்ற பதில் கிடைத்தது (பார்க்க: படம்).

[7] சரிதான், மொழிபெயர்ப்புத் திறனைச் சோதனை செய்து பார்த்து விடுவோமே என்ற விருப்பத்தில்,
“புத்தியுள்ளமனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை…”
இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் என்று சொன்னவுடன், இதுவரை உடனடியாக பதில் கொடுத்துக் கொண்டிருந்த அரட்டைப்பொறி சிறிது நேரம் (அதிர்ச்சியில்???) உறைந்து போனது. அதற்கு மொழி பெயர்க்கத் தெரியவில்லையா அல்லது அதை நான் நையாண்டி செய்வதாக நினைத்துக் கொண்டதா என்று எனக்குப் புரியவில்லை.

பிறகு மெதுவே ஏதோ பிழை ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து இவ்வாறு தடங்கல் ஏற்பட்டால் தளத்தின் உதவியாளரை அணுகவும் என்ற செய்தி திரையில் தோன்றியது. சரி, போகிறது என்று நினைத்து, அடுத்ததாக . . .

siragu OpenAI's ChatGPT-translate tamil to english

[8] டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றிச்சொல்லுக (Tell me about Delhi Election results) என்றவுடன்;
பல கோரிக்கைகள் வைக்கிறாயே, தயவுசெய்து வேகத்தைக் குறைக்கவும் (Too many requests, please slow down) என்று என்னைக் குறை சொல்வது போன்ற மறுமொழி கிடைத்தது. ஆகவே, மேற்கொண்டு சாட்ஜிபிடிக்கு வெறுப்பேற்றாமல் தளத்தை விட்டு வெளியேறி விட்டேன்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர கற்றல் (Machine Learning) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) ஆகிய துறைகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் புதிய முன்னேற்றங்களினால் அரட்டைப்பொறிகளின் செயல்திறனும் மேம்பட்டுக் கொண்டே வருவது கணினி தொழில்நுட்பத்தால் நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாக அமைகிறது.

குறிப்பு: இக்கட்டுரையில் இடம் பெறும் படங்கள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் டால் இ (DALL-E) தளத்தில்உருவாக்கப்பட்டபடங்கள்.

_______________________________________

பின்னிணைப்பு:

Provide a short essay on Dr Ambedkar’s efforts to improve Indian woman’s life

(1) Dr. Bhimrao Ramji Ambedkar was a social reformer in India who dedicated his life to fighting for the rights of marginalized communities, including women. He was born into a lower-caste family and faced discrimination throughout his life, which deeply influenced his political and social beliefs.

Ambedkar was a strong advocate for gender equality and worked tirelessly to improve the lives of women in India. He played a crucial role in the drafting of the Indian constitution, which guarantees equality for all citizens regardless of gender. He also worked to pass laws that prohibited discrimination against women, including the Hindu Code Bill, which aimed to improve the legal rights of Hindu women.

In addition to his political efforts, Ambedkar also founded organizations that focused on empowering women. He established the All India Women’s Conference, which aimed to provide a platform for women to discuss issues facing their communities and to work towards their empowerment. He also founded the BharatiyaStree Shakti, an organization that worked to educate and empower women from marginalized communities.

Ambedkar’s efforts to improve the lives of women in India were instrumental in advancing the rights of women in the country. He fought tirelessly against discrimination and worked to pass laws and establish organizations that aimed to empower women. His legacy continues to inspire social and political activism in India and around the world.

(2) Dr. B.R. Ambedkar was a leading figure in the Indian independence movement and the architect of the Indian Constitution. He was also a strong advocate for the rights and equality of women in India.

Dr. Ambedkar believed that women’s rights were fundamental to the development of a just and equal society. He worked tirelessly to promote women’s education and employment opportunities, as well as their participation in politics and public life.

One of the key ways in which Dr. Ambedkar sought to improve the lives of Indian women was through the adoption of the Hindu Code Bills in the 1950s. These laws sought to reform the discriminatory Hindu personal laws that governed marriage, divorce, inheritance, and other areas of family life. The Hindu Code Bills granted women the right to equal property and inheritance, as well as the right to divorce and remarry.

In addition to his work on the Hindu Code Bills, Dr. Ambedkar also fought for the rights of women in other areas of society. He called for the abolition of the oppressive practice of sati, in which a woman was forced to burn herself on her husband’s funeral pyre. He also worked to end the discriminatory practices of child marriage and dowry.

Dr. Ambedkar’s efforts to improve the lives of Indian women had a profound impact on the country. The adoption of the Hindu Code Bills marked a major shift in the status of women in India, and paved the way for further progress in the decades that followed. Today, women in India continue to benefit from the efforts of Dr. Ambedkar and other advocates for women’s rights.

(3) Dr. Bhimrao Ambedkar was an Indian politician, lawyer, and economist who is best known for his efforts to improve the lives of Indian women. Born into a Dalit (formerly known as untouchable) family, Ambedkar faced discrimination and poverty throughout his childhood. Despite this, he was able to obtain a law degree and eventually became the first Dalit to hold the position of Law Minister in India.

Throughout his political career, Ambedkar worked tirelessly to improve the lives of Indian women. He was a strong advocate for women’s education and rights, and worked to pass legislation that would improve the lives of women across the country.

One of the major contributions of Ambedkar to the lives of Indian women was the passing of the Hindu Code Bill in the 1950s. This bill aimed to improve the rights of Hindu women in areas such as marriage, divorce, and property ownership. It was a significant step towards gender equality in India, and helped to lay the groundwork for future legislation on women’s rights.

Additionally, Ambedkar worked to promote women’s education and employment opportunities. He believed that education was the key to empowering women and improving their lives, and worked to ensure that girls had access to quality education. He also pushed for policies that would encourage women’s participation in the workforce, recognizing the important role that women played in the economy.

In conclusion, Dr. Ambedkar’s efforts to improve the lives of Indian women were significant and far-reaching. Through his tireless advocacy for women’s rights, education, and employment opportunities, he helped to pave the way for future generations of women in India. His work continues to inspire and inspire others to work towards gender equality.

_______________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செநுவுடன் ஓர் கலந்துரையாடல்”

அதிகம் படித்தது