மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வையிழந்தவருக்கு இழப்பீடு



Mar 13, 2017

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று மதுரை மாவட்டம் அலந்காநல்லூர், பாலமேடு பன்ற இடங்களில் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Siragu Jallikattu_struggle8

சுமார் எட்டு நாட்களாக இப்போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து தமிழக சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து போக போலீசார் வலியுறுத்தினர்.

தொடர்ந்து சென்னையில் கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் கலவரம் நடந்தது. அப்போது கலங்கரை விளக்கம் அருகே இருந்த வீட்டில் போலீசார் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கார்த்திக் என்பவர் பார்வையிழந்தார்.

காவல்துறை தாக்குதலில் பார்வையிழந்த கார்த்திக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவரது தாய் விமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காவல் துறையின் தாக்குதல் விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் ஆணை பிறப்பித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்வையிழந்தவருக்கு இழப்பீடு”

அதிகம் படித்தது