மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி



Apr 4, 2017

கடந்த 2016ம் ஆண்டு தமிழக அரசு ஐந்து ஏக்கர் வரை வைத்திருக்கும் விவசாயிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது. ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Siragu-farmers

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் சிறு குறு என பாகுபாடு காட்டாமல் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாயிகளின் பயிர்கடன்கள், நகைக்கடன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 22 நாட்களாக போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி”

அதிகம் படித்தது