மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம்: டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் 11 பேரின் நியமனமும் ரத்து



Dec 22, 2016

கடந்த ஜனவரி 31ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்துக்கு 11பேர்களை நியமனம் செய்தது தமிழக அரசு. இதை எதிர்த்து தி.மு.க, பா.ம.க, புதிய தமிழகம் மனு தாக்கல் செய்தது.

siragu-chennai-highcourt

கடந்த மூன்றாண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. அ.தி.மு.க ஆட்சி முடிவதற்கு மூன்று மாதமே உள்ள நிலையில் அவசரமாக, தகுதி திறமையை கருத்தில் கொள்ளாமல் ஆளுங்கட்சி மற்றும் முதல்வரின் விசுவாசிகளை நியமித்து உள்ளனர். இவர்களின் நியமனம் சட்டவிரோதமானது என உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் இருந்தது.

இம்மனுவின் மீது விசாரணை இன்று நடைபெற்றது. இதை விசாரணை செய்த நீதிபதிகள் கவுல், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் 11பேரின் நியமனத்தை ரத்து செய்தது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம்: டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் 11 பேரின் நியமனமும் ரத்து”

அதிகம் படித்தது