மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை



Apr 3, 2017

தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் சென்ற வருடம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Siragu tamil-nadu

வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டதில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து டிசம்பர் 31க்குள்

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் கால அவகாசம் கோரியது. இதனையடுத்து மே 14க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்பாடம் நாராயணன் வழக்கு தொடர்ந்ததையடுத்து, ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்றும், நீதிமன்ற உத்தரவின்படி மே 14ம் தேதிக்குள்ளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்றும் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

இவ்வழக்கின் இன்றைய விசாரணையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி காரணமாக மே 14க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என்றும் அதற்காக கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

விசாரணையின் முடிவில் தமிழக தேர்தல் ஆணையம் அளித்த மனுவை ஏற்க மறுத்துவிட்டது. பிரச்சனைகளை தீர்க்கவே நீதிமன்றம் உள்ளது என்றும், அரசை நடத்த இல்லை என்றும் கூறியது. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி நடக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு எச்சரிக்கை”

அதிகம் படித்தது